MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • சரிவில் கார் ஓட்ட உங்களுக்கு பயமா.? ஈசியான டிப்ஸ்

சரிவில் கார் ஓட்ட உங்களுக்கு பயமா.? ஈசியான டிப்ஸ்

சரிவான சாலைகளில் கார் ஓட்டும்போது, பின்னோக்கிச் செல்லாமல் இருக்க, முதல் கியரைப் பயன்படுத்துவது, பெடல்களைச் சரியாகக் கையாளுவது மற்றும் நிலையான வேகத்தைப் பராமரிப்பது போன்ற சில எளிய நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.

1 Min read
Author : Raghupati R
Published : Aug 31 2025, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கார் ஓட்டும் டிப்ஸ்
Image Credit : Getty

கார் ஓட்டும் டிப்ஸ்

கார் ஓட்டுவது பலரின் கனவு. ஆனால் புதிதாக கற்றுக்கொள்பவர்களுக்கு சாலையின் நிலைமைகள் சற்று சிரமமாக இருக்கும். குறிப்பாக, சரிவான சாலைகளில் காரை மேலே கொண்டு செல்லும்போது, ​​அது பின்னோக்கிச் சென்று விடுமோ என்ற பயம் அதிகம் இருக்கும். இந்த பயத்தை கடக்க, சில எளிய முறைகளை பின்பற்றினால், கார் ஒருபோதும் பின்நோக்கி நகராது. முதலில், கியர் தேர்வு மிக முக்கியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சரிவான சாலையில் கார் ஓட்டுவது எப்படி?
Image Credit : Getty

சரிவான சாலையில் கார் ஓட்டுவது எப்படி?

சரிவில் காரை மேலே கொண்டு செல்லும்போது பலர் இரண்டாவது கியரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது தவறு. சரியான நடைமுறை, எப்போதும் முதல் கியரில் காரை இயக்குவது. முதல் கியரில் அதிக டார்க் கிடைக்கும், அதனால் கார் எளிதில் முன்னோக்கிச் சென்று சரிவை ஏறிவிடும். அடுத்து, பெடல்களை சரியாகப் பயன்படுத்துவது அவசியம். புதிய ஓட்டுநர்கள் பலர் பிரேக்கை முதலில் விடுவார்கள், இதனால் கார் நியூட்ரலில் போய் பின்னோக்கிச் செல்லும் அபாயம் உள்ளது.

34
கிளட்ச், பிரேக், ஆக்சிலரேட்டர்
Image Credit : Getty

கிளட்ச், பிரேக், ஆக்சிலரேட்டர்

சரியான முறை என்னவென்றால், கியரை மாற்றிய பிறகு பிரேக்கை அழுத்தியபடி வைத்திருக்க வேண்டும். அதன் பின் கிளட்சை மெதுவாக விடும்போது கார் முன்னோக்கிச் செல்ல தயாராகும். அப்போதுதான் பிரேக்கை மெதுவாக விட வேண்டும். கார் வேகம் பெற்றவுடன் கிளட்சையும் முழுவதுமாக விட்டுவிட்டு ஆக்சிலரேட்டரை அழுத்தினால், கார் முன்நோக்கிச் செல்லும்.

44
கார் பின்னோக்கிச் செல்லாமல் இருப்பது
Image Credit : Getty

கார் பின்னோக்கிச் செல்லாமல் இருப்பது

அதுமட்டுமின்றி நிலையான வேகத்தை பராமரிப்பதும் முக்கியம். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட கார்கள் சரிவில் தானாகவே கியரை மாற்றி மேலே செல்கின்றன. அப்போதெல்லாம் ஓட்டுநர் செய்ய வேண்டியது, ஆக்சிலரேட்டரை மெதுவாகக் கட்டுப்படுத்தி ஒரே மாதிரியான வேகத்தை வைத்திருப்பதே. இது காரை பின்னோக்கிச் செல்லாமல் பாதுகாப்பாக மேலே கொண்டு செல்ல உதவும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாகனம்
தமிழ் செய்திகள்
ஏசியாநெட் நியூஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
என்ஜின் டூ டயர் வரை: செகண்ட் ஹாண்ட் கார் வாங்கும் முன் நீங்க கட்டாயம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்!
Recommended image2
Best Car Under 4 Lakh: ரூ.4 லட்சத்துக்குள் கார் வாங்கணுமா? 33.4 கி.மீ. மைலேஜ் தரும் மாருதி கார்!
Recommended image3
Cheapest Bikes: ரூ.58,000 முதல் கிடைக்கும் 5 மலிவு பைக்குகள்! மைலேஜ் அதிகம்.! விலையோ குறைவு.!
Related Stories
Recommended image1
ரொம்ப ரொம்ப கம்மி விலையில் சொகுசு SUV கார்: டொயோட்டா ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் 48V
Recommended image2
பைக் பட்ஜெட்ல ADAS கார்... மலிவு விலையில் இந்த 5 கார்கள் தான் டாப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved