பைக் பட்ஜெட்ல ADAS கார்... மலிவு விலையில் இந்த 5 கார்கள் தான் டாப்!
இந்தியாவில் ADAS தொழில்நுட்பம் இப்போது பல பட்ஜெட் கார்களில் கிடைக்கிறது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வென்யூ, ஹோண்டா அமேஸ், மஹிந்திரா XUV300, கியா சோனெட் போன்ற கார்களில் இந்த அம்சம் உள்ளது.

ADAS தொழில்நுட்பம் கொண்ட பட்ஜெட் கார்கள்
இந்திய கார் சந்தையில், மேம்பட்ட டிரைவர் உதவி அமைப்புகள் (ADAS) தொழில்நுட்பம் இப்போது விலையுயர்ந்த சொகுசு கார்களுக்கு மட்டுமேயானதாக இல்லை. பல பொதுவான கார்களிலும் இந்த அம்சம் தற்போது கிடைக்கிறது. இதனால், வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் மாறியுள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் ADAS பாதுகாப்பு
இந்தியாவில் தற்போது லெவல்-1 மற்றும் லெவல்-2 ADAS தொழில்நுட்பங்கள் கிடைக்கின்றன. குறைந்த பட்ஜெட்டில் ADAS பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கார் வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான ஐந்து மலிவான கார்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஹோண்டா சிட்டி (Honda City)
விலை: ₹12.84 லட்சம் - ₹16.69 லட்சம்
அம்சங்கள்: நடுத்தர செடான் பிரிவில் இது ஒரு நம்பகமான கார். ADAS (ஹோண்டா சென்சிங்) அம்சம் V, VX, மற்றும் ZX ஆகிய வேரியண்ட்டுகளில் மட்டுமே கிடைக்கிறது.
இன்ஜின்: இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (121hp) உள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்கள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue)
விலை: ₹12.53 லட்சம் - ₹13.62 லட்சம்
அம்சங்கள்: இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் பிரபலமான கார். இதில் லெவல்-1 ADAS (முன் மோதல் எச்சரிக்கை, லேன் உதவி போன்றவை) பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் டாப் வேரியண்டான SX(O) -வில் மட்டுமே ADAS அம்சம் உள்ளது.
இன்ஜின்: இதில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (120hp) - MT/DCT மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116hp) - MT இன்ஜின் வேரியண்ட்கள் உள்ளன.
ஹோண்டா அமேஸ் (Honda Amaze)
விலை: ₹10.04 லட்சம் - ₹11.24 லட்சம்
அம்சங்கள்: இந்தியாவில் ADAS தொழில்நுட்பத்துடன் கூடிய மலிவான கார் இது. சப்-4 மீட்டர் செடான் பிரிவில் ADAS அம்சம் பெற்ற முதல் கார் இதுதான். இதன் டாப் மாடலான ZX வேரியண்ட்டில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது.
இன்ஜின்: இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (90hp) உள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் உள்ளன.
மஹிந்திரா XUV300
விலை: ₹12.62 லட்சம் - ₹15.80 லட்சம்
அம்சங்கள்: இதில் லெவல்-2 ADAS பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இதன் AX5 L மற்றும் AX7 L வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த அம்சம் கிடைக்கிறது.
இன்ஜின்: 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் (131hp) - MT/TC மற்றும் 1.5 லிட்டர் டீசல்-MT இன்ஜின் வேரியண்ட்கள் உள்ளன.
கியா சோனெட் (Kia Sonet)
விலை: ₹14.84 லட்சம் - ₹15.74 லட்சம்
அம்சங்கள்: இது ஒரு ஸ்டைலான எஸ்யூவி. இதில் லெவல்-1 ADAS அம்சம் GTX+, X-Line ஆகிய வேரியண்ட்டுகளில் உள்ளது.
இன்ஜின்: 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (120hp) - DCT இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் (116hp) - TC இன்ஜின் வேரியண்ட்கள் உள்ளன.