MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Hero : லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் தரும் பைக்கின் விலையை அதிரடியாக குறைத்த ஹீரோ நிறுவனம்

Hero : லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் தரும் பைக்கின் விலையை அதிரடியாக குறைத்த ஹீரோ நிறுவனம்

Hero HF Deluxe price drop : ஹீரோ மோட்டோகார்ப் தனது பிரபலமான பைக்கான ஹீரோ HF டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் எடிஷன் பைக்கின் விலையை குறைத்துள்ளது. ஆனால், இந்த ஆஃபர் தற்போதைக்கு சில மாநிலங்களில் மட்டுமே கிடைக்கும்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 25 2026, 11:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hero HF Deluxe price drop
Image Credit : Social media

Hero HF Deluxe price drop

குறைந்த விலையில், நல்ல மைலேஜ் தரும் ஒரு சூப்பர் பைக் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்தியாவின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது பிரபலமான கம்யூட்டர் பைக்கான ஹீரோ HF டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் எடிஷன் பைக்கின் விலையைக் குறைத்துள்ளது. இந்த மாடலுக்கு நிறுவனம் ₹7,635 வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதனால், பைக்கின் ஆரம்ப விலை ₹59,999 ஆகக் குறைந்துள்ளது. முன்பு இந்த பைக்கின் விலை ₹67,634 ஆக இருந்தது.

Hero Bike Discount Offer: தள்ளுபடி விலையில் ஹீரோ பைக்.. E85 ஸ்பிளெண்டர் வாங்க இதான் சரியான நேரம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விலை குறைப்பில் ட்விஸ்ட்
Image Credit : Heromotocorp.com

விலை குறைப்பில் ட்விஸ்ட்

ஹீரோ HF டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் எடிஷன், 2023 ஜூன் மாதம்தான் மார்க்கெட்டுக்கு வந்தது. அப்போது அதன் விலை ₹60,760 ஆக இருந்தது. பின்னர், பலமுறை விலை உயர்த்தப்பட்டு ₹67,634-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை, அறிமுக விலையை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பம்சம்.

ஆனால், இந்த விலை குறைப்பு இந்தியா முழுவதும் கிடைக்காது. தற்போதைக்கு, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய விலையின் பலன் கிடைக்கும். மற்ற மாநிலங்களுக்கு இந்த ஆஃபர் எப்போது வரும் என்பது பற்றி நிறுவனம் இன்னும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

Related Articles

Related image1
Hero HF Deluxe: ரூ.70 ஆயிரத்தில் 70 கிமீ மைலேஜ் தரும் பைக்!
Related image2
Hero Bike Discount Offer: தள்ளுபடி விலையில் ஹீரோ பைக்.. E85 ஸ்பிளெண்டர் வாங்க இதான் சரியான நேரம்
34
97.2 சிசி இன்ஜின் மற்றும் 70 கி.மீ மைலேஜ்
Image Credit : honda,hero

97.2 சிசி இன்ஜின் மற்றும் 70 கி.மீ மைலேஜ்

ஹீரோ HF டீலக்ஸ் பைக்கில், ஏற்கெனவே உள்ள 97.2 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.8 பி.எஸ் பவரையும், 8.05 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் வரும் இந்த இன்ஜின், தினசரிப் பயன்பாட்டுக்கு ஏற்ற செயல்திறனை வழங்குகிறது. இந்த பைக் லிட்டருக்கு சுமார் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது.

உறுதியான ட்யூபுலர் டபுள் கிராடில் ஃபிரேம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ், டூயல் ரியர் ஷாக் அப்சார்பர்கள், மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் ஆகியவை இதன் மற்ற முக்கிய அம்சங்கள். மோசமான சாலைகளிலும் நல்ல பயண அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் இதன் சஸ்பென்ஷன் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

44
கடுமையான போட்டி நிலவும் செக்மென்ட்
Image Credit : HERO

கடுமையான போட்டி நிலவும் செக்மென்ட்

இந்த விலை குறைப்புக்கான காரணத்தை ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், என்ட்ரி-லெவல் கம்யூட்டர் பைக் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தவே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். தற்போது இந்தப் பிரிவில் ஹோண்டா ஷைன் 100, பஜாஜ் பிளாட்டினா 100, மற்றும் டிவிஎஸ் ஸ்போர்ட் போன்ற மாடல்கள் முக்கியப் போட்டியாளர்களாக உள்ளன. குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதே ஹீரோவின் நோக்கமாக இருக்கலாம்.

விற்பனைக் கணக்குகளைப் பார்த்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கம்யூட்டர் பைக்குகளில் ஹீரோ HF டீலக்ஸ் எப்போதுமே ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹீரோ பைக்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hyundai Aura CNG: குறைந்த விலையில் அதிக மைலேஜ்.. பட்டையை கிளப்பும் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி.. வசதிகள் மாஸ் காட்டுது
Recommended image2
Family Scooter: பேமிலிக்கு ஏற்ற ஸ்கூட்டர் வரப்போகுது.. சிம்பிள் எனர்ஜியின் ஸ்கூட்டர் கலக்கப்போகுது
Recommended image3
Car : மாருதி டிசையரை விட அதிக மைலேஜ்... கார் மார்க்கெட்டை அலறவிடும் செடான் கார்... விலையும் ரொம்ப கம்மி
Related Stories
Recommended image1
Hero HF Deluxe: ரூ.70 ஆயிரத்தில் 70 கிமீ மைலேஜ் தரும் பைக்!
Recommended image2
Hero Bike Discount Offer: தள்ளுபடி விலையில் ஹீரோ பைக்.. E85 ஸ்பிளெண்டர் வாங்க இதான் சரியான நேரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved