- Home
- Auto
- Hero Bike Discount Offer: தள்ளுபடி விலையில் ஹீரோ பைக்.. E85 ஸ்பிளெண்டர் வாங்க இதான் சரியான நேரம்
Hero Bike Discount Offer: தள்ளுபடி விலையில் ஹீரோ பைக்.. E85 ஸ்பிளெண்டர் வாங்க இதான் சரியான நேரம்
Hero Bike Discount Offer: எத்தனால் கலவை எரிபொருளை ஊக்குவிக்கும் அரசின் முயற்சிக்கு இணங்க, ஹீரோ மோட்டோகார்ப் தனது ஸ்பிலெண்டர் பிளெக்ஸ், எச்.எஃப். டீலக்ஸ் பிளெக்ஸ் பைக்குகளுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. ஜூலை 2026 வரை இந்த சலுகை கிடைக்கும்.

ஹீரோ பைக் தள்ளுபடி சலுகை
நாட்டில் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் வேகமெடுத்து வருகின்றன. இந்த சூழலில், அதிக எத்தனால் கொண்ட எரிபொருளிலும் இயங்கக்கூடிய புதிய தொழில்நுட்ப பைக்குகளை ஹீரோ நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ஸ்பிலெண்டர் பிளெக்ஸ் மற்றும் எச்.எஃப். டீலக்ஸ் பிளெக்ஸ் மாடல்களுக்கு தற்போது சிறப்பு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பிலெண்டர் புதிய விலை=
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த இரு மாடல்களுக்கும் ரூ.4,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஸ்பிலெண்டர் பிளெக்ஸ் மாடலின் ஷோரூம் விலை ரூ.78,710 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான எத்தனால் கலவைத் திறன் கொண்ட மாடலை ஒப்பிடுகையில், இந்த புதிய தொழில்நுட்ப பைக்கின் விலை வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறைந்த விலையில் எச்.எஃப். டீலக்ஸ் பிளெக்ஸ்
மேலும், எச்.எஃப். டீலக்ஸ் பிளெக்ஸ் மாடல் தள்ளுபடிக்குப் பிறகு ரூ.68,792 என்ற விலையில் கிடைக்கிறது. குறிப்பாக, சாதாரண மாடலை விட குறைந்த விலையில் இந்த புதிய தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பைக் விற்பனை செய்யப்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் மேம்பட்ட எரிபொருள் தேர்வை விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
எத்தனால் கலவை எரிபொருளுக்கு ஏற்ற மாற்றங்கள்
இந்த இரண்டு பைக்குகளிலும் 97.2 கன சென்டிமீட்டர் திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவு எத்தனால் கலந்த எரிபொருளை கையாளும் வகையில், மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோக அமைப்பு, கூடுதல் வடிகட்டி வசதி உள்ளிட்ட பல தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாங்குவதற்கு இதுவே சரியான தருணமா?
இந்த சிறப்பு விலைக் குறைப்பு சலுகை ஜூலை 2026 இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். முதற்கட்டமாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் இந்த மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பின்னர் நாட்டின் பிற பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கால எரிபொருள் மாற்றங்களுக்கு தயாராக இருக்க விரும்பும் இருசக்கர வாகன பயனர்களுக்கு, ஹீரோவின் இந்த புதிய முயற்சி கவனிக்கத்தக்க தேர்வாக உருவெடுத்துள்ளது.

