- Home
- Auto
- 130 கி.மீ மைலேஜ், 3 பேட்டரி ஆப்ஷன்கள்: ரூ.90,000-க்கு களமிறங்கிய நியூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
130 கி.மீ மைலேஜ், 3 பேட்டரி ஆப்ஷன்கள்: ரூ.90,000-க்கு களமிறங்கிய நியூ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
முன்னணி மின்வாகன உற்பத்தியாளரான ‘இ-ஸ்பிரிண்டோ’, நுகர்வோர் சந்தைக்காகத் தன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 'G1' மாடலை ரூ.89,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இ-ஸ்பிரிண்டோ G1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ‘இ-ஸ்பிரிண்டோ’ தனிநவபர் வாடிக்கையாளர்களுக்காகத் தன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 'G1' மாநாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான வாடிக்கையாளர் டெலிவரிகள் வரும் 2027 ஜன. 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ பத்திரிகைக் குறிப்பின்படி, இந்த G1 ஸ்கூட்டர் 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
2.0 kW பதிப்பு - ரூ.89,999
2.5 kW பதிப்பு - ரூ.94,999
3.0 kW பதிப்பு - ரூ.99,999
பேட்டரி & மைலேஜ்
இந்த ஸ்கூட்டர் மூன்று விதமான பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. முறையே 80 கி.மீ, 100 கி.மீ மற்றும் 130 கி.மீ வரை மைலேஜ் (Range) வழங்கும் திறன் கொண்டவை. இதில் Eco, City மற்றும் Sport ஆகிய மூன்று ரைடிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் உச்ச வேகம் முறையே மணிக்கு 30 கி.மீ, 40 கி.மீ மற்றும் 50 கி.மீ ஆகும்.
சிறப்பு அம்சங்கள்
இந்த G1 ஸ்கூட்டர் 150 கிலோ எடையைத் தாங்கும் கொள்ளளவு கொண்டது. 12 இன்ச் டூப்லெஸ் டயர்கள் மற்றும் 165 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground Clearance) வழங்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி தூசி மற்றும் தண்ணீரிடமிருந்து பாதுகாப்புப் பெற IP67 தரச்சான்று பெற்றுள்ளது.
மேலும், காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (Combi Braking System) மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் உள்ளன. விருப்பப்பட்டால் சந்தா (Subscription) செலுத்தி நேவிகேஷன் வசதியைப் பெறலாம். இது சார்கோல் பிளாக் (Charcoal Black), ஸ்லேட் கிரே (Slate Grey), ஹொரைசன் ப்ளூ (Horizon Blue) மற்றும் பைன் கிரீன் (Pine Green) ஆகிய 4 கலர்களில் கிடைக்கும்.
B2B-ல் இருந்து B2C சந்தைக்கு விரிவாக்கம்:
இந்த அறிமுகத்தின் மூலம், இ-ஸ்பிரிண்டோ நிறுவனம் இதுவரை இயங்கி வந்த வணிகத்திலிருந்து வணிகம் (B2B) என்ற பிரிவிலிருந்து, நேரடியாக நுகர்வோர் சந்தைக்கு (B2C) கால் பதித்துள்ளது. ஏற்கனவே இந்தியச் சாலைகளில் தங்களது 70,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கத்தில் இருப்பதாகவும், ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மூன்று ஆலைகளை இயக்கி வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய இ-ஸ்பிரிண்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷாலு குப்தா (Shalu Gupta), இந்தியக் குடும்பங்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு G1 ஸ்கூட்டரை உருவாக்க கடந்த 2 ஆண்டுகளாக உழைத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், நுகர்வோர் சந்தையில் நுழையும்போது நம்பகத்தன்மை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பது தங்களின் முதன்மையான முன்னுரிமைகளாக இருக்கும் என்றார்.

