MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • ரூ.3.49 லட்சத்தில்.. 6 ஏர்பேக்குகள் + 35 கிமீ மைலேஜ்.. பட்ஜெட் கார்களின் லிஸ்ட் இதோ!

ரூ.3.49 லட்சத்தில்.. 6 ஏர்பேக்குகள் + 35 கிமீ மைலேஜ்.. பட்ஜெட் கார்களின் லிஸ்ட் இதோ!

அதிகரிக்கும் எரிபொருள் விலைக்கு மத்தியில், குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் கார்கள் பிரபலமடைந்துள்ளன. ரூ.5 லட்சத்துக்குள் கிடைக்கும் கார்களை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : May 02 2026, 01:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்
Image Credit : Asianet News

குறைந்த விலையில் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்

எரிபொருள் விலை ஏறிக்கொண்டே இருக்கும் இந்த காலத்தில், “குறைந்த செலவு + அதிக மைலேஜ்” என்ற கூட்டணி தான் கார் வாங்குபவர்களின் முதல் தேர்வாக மாறியுள்ளது. ரூ.5 லட்சம் பட்ஜெட்டுக்குள் கூட, நல்ல மைலேஜ், பாதுகாப்பு அம்சங்கள், மற்றும் நவீன வசதிகளுடன் சில கார்கள் கிடைப்பது பெரிய பிளஸ். அதிலும் பெட்ரோல் மட்டுமல்ல சிஎன்ஜி ஆப்ஷனும் இருப்பதால், தினசரி செலவை கட்டுப்படுத்த முடிகிறது. அந்த வரிசையில் முக்கியமான சில மாடல்களை பார்க்கலாம்.

26
மாருதி செலிரியோ
Image Credit : stockPhoto

மாருதி செலிரியோ

முதலில் மைலேஜ் கிங் என்றால் மாருதி செலிரியோ தான் நினைவுக்கு வரும். இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரு வகைகளிலும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. அதோடு, நவீன அம்சங்களும், மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளும் சேர்ந்து ஒரு முழுமையான பேக்கேஜ் ஆக இருக்கிறது. ஆரம்ப விலை ரூ.4.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

Related Articles

Related image1
Now Playing
Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
Related image2
Hyundai Loniq 5 Facelift: ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்.. சென்னை-கோவை வரை போகலாம்! மாஸ் காட்டும் புதிய எலெக்ட்ரிக் கார்
36
டாடா டியாகோ
Image Credit : CarDekho

டாடா டியாகோ

அடுத்து பாதுகாப்பு முக்கியமா நினைக்கிறவர்களுக்கு டாடா டியாகோ ஒரு நம்பகமான தேர்வு. வலுவான கட்டுமான தரம், நல்ல பாதுகாப்பு மதிப்பீடு ஆகியவை இதன் பலம். மைலேஜ் சற்று குறைவாக இருந்தாலும், பாதுகாப்பில் இந்த கார் முன்னிலையில் உள்ளது. விலை ரூ.4.59 லட்சம் முதல் ஆரம்பிக்கிறது.

46
ரெனால்ட் க்விட்
Image Credit : Google

ரெனால்ட் க்விட்

ஸ்டைலும், வசதியும் வேண்டும்னா ரெனால்ட் க்விட் உங்களுக்கு பொருத்தம். இளம் தலைமுறையை கவரும் டிசைன், டச் ஸ்கிரீன் போன்ற அம்சங்கள், ஏர்பேக், பார்கிங் சென்சார் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் இது வருகிறது. நகரப் பயணத்திற்கு மிகவும் வசதியான கார். விலை ரூ.4.29 லட்சம் முதல் தொடங்குகிறது.

56
மாருதி ஆல்டோ கே10
Image Credit : stockPhoto

மாருதி ஆல்டோ கே10

பட்ஜெட்டில் சிம்பிள், நம்பகமான தேர்வு என்றால் மாருதி ஆல்டோ கே10. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எண்ட்ரி-லெவல் கார்களில் இது மிகவும் முக்கியமானது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரண்டிலும் கிடைக்கும் இந்த கார், குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற மைலேஜ் மற்றும் அடிப்படை பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. ஆரம்ப விலை ரூ.3.69 லட்சம்.

66
மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ
Image Credit : maruti suzuki

மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ

இறுதியாக குறைந்த விலையில் அதிக மதிப்பு தரும் மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரு விருப்பங்களிலும் நல்ல மைலேஜ் தருகிறது. இந்த விலை வரம்பில் ஆறு ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கிடைப்பது கூடுதல் பலம். ஆரம்ப விலை ரூ.3.49 லட்சம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குறைந்த விலை கார்
குடும்ப கார்கள்
டாடா கார்கள்
ரெனால்ட் கார்
மாருதி கார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
30 நாட்களில் 56,000 SUV விற்ற மஹிந்திரா.. எந்த மாடல்? ஏன் தெரியுமா?
Recommended image2
பைக் விற்பனையில் நாங்கதான் கிங்.. மாஸ் காட்டும் ஹீரோ மோட்டோகார்ப்.. அடேங்கப்பா! இத்தனை லட்சம் விற்பனையா?
Recommended image3
ஸ்மூத் ரைடிங் வேண்டுமா? உங்கள் பைக்கிற்கு ஏற்ற 'பெஸ்ட்' என்ஜின் ஆயிலை கண்டுபிடிப்பது எப்படி? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Now Playing
Car AC | கார் ஏசி கூலிங் பத்தலையா? இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க ! சில்லுன்னு இருக்கும் !
Recommended image2
Hyundai Loniq 5 Facelift: ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும்.. சென்னை-கோவை வரை போகலாம்! மாஸ் காட்டும் புதிய எலெக்ட்ரிக் கார்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved