MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • Car Buying Tips: பெண்கள் பெயரில் கார் வாங்கினா இவ்ளோ லாபமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Car Buying Tips: பெண்கள் பெயரில் கார் வாங்கினா இவ்ளோ லாபமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Car Buying Tips: நீங்க புதுசா கார் வாங்கும்போது யார் பெயரில் பதிவு செய்கிறீர்கள். உங்க வீட்டில் இருக்கும் பெண்கள் பெயரில் ரிஜிஸ்டர் செய்தால் ஆயிரக்கணக்கில் பணம் மிச்சம் செய்ய முடியும். இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 10 2026, 08:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Car Buying Tips
Image Credit : AI

Car Buying Tips

நாமும் சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்பது நடுத்தரக் குடும்பங்கள் பலரின் வாழ்நாள் கனவாக உள்ளது. அப்படி கார் வாங்கத் திட்டமிடும்போது, பட்ஜெட் மற்றும் காரின் மாடலைத் தேர்வு செய்வதில் காட்டும் ஆர்வத்தை, அது யார் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் காட்டுவதில்லை. ஆனால், வாகனத்தை வீட்டில் உள்ள பெண்கள் பெயரில் பதிவு செய்வதன் மூலம் கணிசமான தொகையைச் சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பெண்களின் பெயரில் வாகனக் கடன் வாங்குவதற்கும், காரைப் பதிவு செய்வதற்கும் சில வங்கிகளும், நிதி நிறுவனங்களும் வழங்கும் முக்கியச் சலுகைகள் இதோ:

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. வட்டி விகிதத்தில் தள்ளுபடி
Image Credit : Gemini

1. வட்டி விகிதத்தில் தள்ளுபடி

கார் வாங்குவதற்காக வங்கிகளை அணுகும்போது, வீட்டில் உள்ள பெண் உறுப்பினரை (மனைவி, தாய் அல்லது சகோதரி) முதன்மை விண்ணப்பதாரராகக் (Primary Applicant) கொண்டு கடன் பெற்றால், பல முன்னணி வங்கிகள் வட்டி விகிதத்தில் 0.05% முதல் 0.1% வரை சலுகை அளிக்கின்றன. ஆரம்பத்தில் இது சிறிய தொகையாகத் தெரிந்தாலும், 5 முதல் 7 ஆண்டுகள் வரையிலான கடன் காலத்தின் முடிவில் வட்டிச் சுமையை இது கணிசமாகக் குறைக்கும்.

2. டவுன் பேமென்ட் சலுகைகள்

பெண் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், சில தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மிகக் குறைந்த டவுன் பேமென்ட் அல்லது பூஜ்ஜிய டவுன் பேமென்ட் (Zero Down Payment) திட்டங்களின் கீழ் கார் கடன்களை வழங்குகின்றன.

Related Articles

Related image1
No.1 Car: 21,006 பேர் தேர்வு செய்த கார்.. இந்தியாவின் நம்பர் 1 கார் இதுதான் மக்களே!
Related image2
Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!
34
3. வாகனக் காப்பீட்டு பிரீமியம் (Car Insurance)
Image Credit : social media

3. வாகனக் காப்பீட்டு பிரீமியம் (Car Insurance)

பொதுவாகவே, பெண்கள் பாதுகாப்பாகவும் நிதானமாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் என்ற கருத்து நிலவுவதால், சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பெண்களுக்கு வாகனக் காப்பீட்டுப் பிரீமியத்தில் (Premium) சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குகின்றன. எனினும், இது வாகனத்தின் வகை மற்றும் அந்தந்த நிறுவனங்களின் விதிமுறைகளைப் பொறுத்தே அமையும்.

4. வணிக ரீதியான வரிச் சலுகைகள் (Business Tax Benefits)

பெண்கள் பெயரில் தொழில் அல்லது வணிகம் இருந்து, அந்தத் தொழில் தேவைக்காகக் கார் வாங்கப்பட்டால், வருமான வரிச் சட்டத்தின் கீழ் வாகனத்தின் தேய்மானத்தை (Depreciation) காட்டி வரிச் சலுகைகளைப் பெற தகுதியைப் பொறுத்து வாய்ப்புகள் உள்ளன.

44
தமிழ்நாட்டிற்கு இது பொருந்துமா?
Image Credit : Asianet News

தமிழ்நாட்டிற்கு இது பொருந்துமா?

இந்தியாவில் டெல்லி போன்ற சில மாநிலங்களில் பெண்கள் பெயரில் வாகனப் பதிவு செய்யும்போது சாலை வரியில் (Road Tax) சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்குச் சாலை வரியில் தனியாக எந்தச் சலுகையும் தற்போதைக்குக் கிடையாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சாலை வரி விதிப்புதான் நடைமுறையில் உள்ளது.

ஆனாலும் தமிழ்நாட்டில் கார் வாங்குபவர்கள் பெண்கள் பெயரில் கடன் பெறும்போது வங்கி வட்டிச் சலுகை மற்றும் இன்சூரன்ஸ் சலுகைகளைப் தாராளமாகப் பெற முடியும். இந்தச் சலுகைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, ஒரு நடுத்தரக் காரின் ஒட்டுமொத்தச் செலவில் சில ஆயிரங்கள் வரை மிச்சப்படுத்த வாய்ப்புள்ளது.

முக்கிய அறிவிப்பு

வங்கிக்கு வங்கி வட்டிச் சலுகைகளும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நிறுவனம் பிரீமியத் தொகையும் மாறுபடும். எனவே, காரை இறுதி செய்யும் முன்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் நிதி ஆலோசகர்களிடம் பேசி, உங்களுக்கான சலுகைகளை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கார் செய்தி
ஆட்டோ செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
TVS Apache: 70 லட்சம் பைக்குகள் விற்பனை: டிவிஎஸ் அப்பாச்சி படைத்த புதிய வரலாறு!
Recommended image2
Budget Bikes: விலையும் கம்மி! மைலேஜும் அதிகம்! நடுத்தர மக்களுக்கு ஏத்த டாப் 5 பட்ஜெட் பைக்குகள் இதோ!
Recommended image3
Cheapest EV : வெறும் ₹5.2 லட்சத்துக்கு எலக்ட்ரிக் காரா? இதவிட பெஸ்ட் வேற எங்கயும் இல்ல!
Related Stories
Recommended image1
No.1 Car: 21,006 பேர் தேர்வு செய்த கார்.. இந்தியாவின் நம்பர் 1 கார் இதுதான் மக்களே!
Recommended image2
Interesting Facts: கார் கண்ணாடியில் கருப்புப் புள்ளிகள்.. வெறும் டிசைன் இல்ல.. சயின்ஸ் இருக்கு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved