MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • No.1 Car: 21,006 பேர் தேர்வு செய்த கார்.. இந்தியாவின் நம்பர் 1 கார் இதுதான் மக்களே!

No.1 Car: 21,006 பேர் தேர்வு செய்த கார்.. இந்தியாவின் நம்பர் 1 கார் இதுதான் மக்களே!

No.1 Car: ஒரு கார் வாங்க நினைக்கும் போது, "இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மாடல் எது?" என்பதே பலரின் முதல் கேள்வியாக இருக்கும். பல ஆண்டுகளாக மாருதி மாடல்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த பட்டியலில், தற்போது எதிர்பாராத மாற்றம் நடந்துள்ளது.

2 Min read
Author : Raghupati R
Published : Jul 08 2026, 08:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அதிகம் விற்பனையான கார்
Image Credit : X@AarizRizvi

அதிகம் விற்பனையான கார்

இந்திய கார் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி மாடல்களுக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாக, 2026 ஜூன் மாத விற்பனை பட்டியலில் டாடா பஞ்ச் முதலிடத்தைப் பிடித்தது புதிய சாதனையைப் பதிவு செய்தது. இதன் மூலம் நீண்ட காலமாக முன்னிலை வகித்து வந்த மாருதி மாடல்களுக்கு கடுமையான போட்டியை டாடா வழங்கியுள்ளது. வெளியான விற்பனை விவரங்களின்படி, 2026 ஜூன் மாதத்தில் டாடா பஞ்ச் 21,006 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இந்தியாவின் நம்பர் 1 கார்
Image Credit : X@basedauto

இந்தியாவின் நம்பர் 1 கார்

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 10,446 யூனிட்கள் மட்டுமே விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 101.09 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒரே ஆண்டில் விற்பனையை இரட்டிப்பாக்கும் அதிகமாக உயர்த்தியிருப்பது இந்த மாடலின் சந்தை வரவேற்பை வெளிப்படுத்துகிறது. டாப் 10 பட்டியலில் டாடாவின் ஆதிக்கம் இதோடு நிற்கவில்லை. டாடா நெக்ஸான் 18,335 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மொத்த வளர்ச்சி 58.03 சதவீதமாக உள்ளது. இரண்டு முன்னணி இடங்களிலும் டாடா மாடல்கள் இடம்பெற்றிருப்பது, நிறுவனத்தின் எஸ்யூவி வரிசைக்கு கிடைத்திருக்கும் வலுவான வரவேற்பைக் காட்டுகிறது.

Related Articles

Related image1
Best Value Car: மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. இந்த பட்ஜெட் காரை மிஸ் பண்ணாதீங்க.!!
Related image2
Maruti : கிரெட்டாவுக்கு செக்! விக்டோரிஸ் கார் விலையை அதிரடியாக குறைத்த மாருதி - இப்போ இன்னும் சீப்!
35
ஜூன் 2026 கார் விற்பனை
Image Credit : stockPhoto

ஜூன் 2026 கார் விற்பனை

மாருதி சுசுகியின் டிசையர் 17,899 யூனிட்களுடன் மூன்றாவது இடத்திலும், வேகன்ஆர் 16,952 யூனிட்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளன. எர்டிகா 16,111 யூனிட்களுடன் ஐந்தாவது இடத்தையும், ஸ்விஃப்ட் 15,215 யூனிட்களுடன் ஆறாவது இடத்தையும் தக்க வைத்துள்ளன. மஹிந்திரா ஸ்கார்பியோ 14,097 யூனிட்களுடன் ஏழாவது இடத்தைப் பிடித்தது, விற்பனையில் 33.83 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மாருதி பலேனோ ஒன்று இடத்திலும், ஹூண்டாய் வென்யூ பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. புதிய கார் வாங்க திட்டமிடுபவர்களுக்கு இந்த விற்பனைப் பட்டியல் ஒரு முக்கிய வழிகாட்டியாக அமைகிறது.

45
டாடா பஞ்ச்
Image Credit : Tatamotors

டாடா பஞ்ச்

சந்தையில் அதிக வரவேற்பைப் பெறும் மாடல்களின் செயல்திறன், பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மீள் விற்பனை மதிப்பு போன்ற அம்சங்களை ஒப்பிட்டு முடிவு எடுப்பது பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், விற்பனை எண்ணிக்கையை மட்டுமே கொண்டு செய்யாமல், தனிப்பட்ட தேவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். டாடா பஞ்ச் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அதன் விலை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள். இந்த கார் ரூ.5.64 லட்சம் முதல் ரூ.10.67 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு சுமார் 18 முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் நிலையில், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு சுமார் 27 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது.

55
டாடா பஞ்ச் விற்பனை
Image Credit : X@AarizRizvibasedauto

டாடா பஞ்ச் விற்பனை

பாதுகாப்பு அம்சங்களிலும் டாடா பஞ்ச் முன்னிலை வகிக்கிறது. குலோபல் NCAP மற்றும் இந்தியா NCAP கிராஷ் டெஸ்ட்களில் 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு பெற்றிருப்பது, குடும்ப பயன்பாட்டுக்கான பாதுகாப்பான எஸ்யூவி என்ற நம்பிக்கையை வாடிக்கையாளர்களிடம் உருவாக்கியுள்ளது. அதனுடன் போட்டித்திறன் வாய்ந்த விலை, எஸ்யூவி வடிவமைப்பு மற்றும் நல்ல அம்சங்களின் சேர்க்கை ஆகியவை இந்த மாடலை இந்தியாவின் அதிகம் விற்பனையான காராக மாற்றப்பட்டுள்ளன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாடா மோட்டார்ஸ்
மாருதி சுசூகி
ஹூண்டாய்
மகிந்திரா
வாகனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Value Car: மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. இந்த பட்ஜெட் காரை மிஸ் பண்ணாதீங்க.!!
Recommended image2
E25 Petrol: E20-க்கு அடுத்து E25 பெட்ரோல்... வண்டி மைலேஜ் குறையுமா?
Recommended image3
Maruti : கிரெட்டாவுக்கு செக்! விக்டோரிஸ் கார் விலையை அதிரடியாக குறைத்த மாருதி - இப்போ இன்னும் சீப்!
Related Stories
Recommended image1
Best Value Car: மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெஸ்ட் சாய்ஸ்.. இந்த பட்ஜெட் காரை மிஸ் பண்ணாதீங்க.!!
Recommended image2
Maruti : கிரெட்டாவுக்கு செக்! விக்டோரிஸ் கார் விலையை அதிரடியாக குறைத்த மாருதி - இப்போ இன்னும் சீப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved