ஜனவரி 22க்கு முன் இந்த காரை வாங்கினால்.. லட்சக்கணக்கில் காசை மிச்சப்படுத்தலாம்!
ஜனவரி 22-க்குள் இந்த காரை வாங்குபவர்களுக்கு இந்த பலன்கள் கிடைக்கும், இது வரவிருக்கும் 3% விலை உயர்வின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது.

நிசான் மேக்னைட் தள்ளுபடி
ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமான நிசான், இந்திய சந்தையில் தனது பிரபலமான சப்-காம்பாக்ட் எஸ்யூவி நிசான் மேக்னைட் மீது புத்தாண்டை முன்னிட்டு பெரிய தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மேக்னைட்டின் விலையை 3 சதவீதம் உயர்த்த திட்டமிட்டிருந்தாலும், தற்போது அந்த உயர்வின் தாக்கத்தை குறைக்கும் வகையில் கனிசமான சலுகைகளை நிறுவனம் வழங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. ஜனவரி 22க்கு முன் மேக்னைட் வாங்கினால், ரூ.1.20 லட்சம் வரை பலன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது மேக்னைட்டின் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.5.61 லட்சமாகவே தொடர்கிறது. திட்டமிட்ட விலை உயர்வு அமல்படுத்தப்பட்டால், இந்த எஸ்யூவி ரூ.5.78 லட்சத்தில் விற்பனைக்கு வரும். இந்த உயர்வு அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என்றாலும், அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1.20 லட்சம் வரையிலான பலன்கள் விலை உயர்வின் தாக்கத்தை சமாளிக்க உதவும். இருப்பினும், இந்த சலுகைகளில் எந்தெந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறித்து நிறுவனம் விரிவாக விளக்கப்படவில்லை.
காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில், மேக்னைட் Renault Kiger, Tata Punch, Hyundai Venue, Maruti Suzuki Fronx, Kia Sonet போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களில், மேக்னைட் Global NCAP சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த விலை வரம்பில் கிடைக்கும் பாதுகாப்பான வாகனங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேக்னைட் புத்தாண்டு சலுகை
பாதுகாப்பு அம்சங்களாக, மேக்னைட்டில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் மற்றும் ஐபிடி போன்றவை வசதிகள் வழங்கப்படுகின்றன. இவை தினசரி நகர ஓட்டத்திலும், நீண்ட பயணங்களிலும் கூடுதல் நம்பிக்கையை தருகின்றன.
இன்ஜின் தேர்வுகளைப் பார்க்கும்போது, இந்த எஸ்யூவி 1.0 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என இரண்டு விருப்பங்களில் கிடைக்கிறது. மேலும், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி கிட் விருப்பமும் வழங்கப்படுகிறது. இது சுமார் 24 கிமீ வரை மைலேஜ் தரும் என கூறப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன.
உள் அமைப்பில், மேக்னைட் நல்ல கேபின் ஸ்பேஸ், 336 லிட்டர் பூட் திறன் மற்றும் இந்த விலை வரம்பில் கவனம் ஈர்க்கும் வடிவமைப்பை வழங்குகிறது. 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக, கரடுமுரடான சாலைகளிலும் இது எளிதாக இயக்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகள் நகரம், டீலர்ஷிப், ஸ்டாக், நிறம் மற்றும் வேரியண்ட் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

