MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Auto
  • 137 கிமீ மைலேஜ் தருது.. 8000 ரூபாய் விலை வேற குறைவு.. பஜாஜ் சேடக் புதிய வேரியண்ட் வந்தாச்சு!

137 கிமீ மைலேஜ் தருது.. 8000 ரூபாய் விலை வேற குறைவு.. பஜாஜ் சேடக் புதிய வேரியண்ட் வந்தாச்சு!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டான ப்ளூ 3202-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் முந்தைய வகைகளை விட மலிவானது மற்றும் அதிக வரம்பை வழங்குகிறது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 137 கி.மீ வரை செல்லும். புதிய பஜாஜ் சேடக் ப்ளூ 3202 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாகும்.

2 Min read
Author : Raghupati R
| Updated : Sep 03 2024, 09:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Bajaj Chetak New Electric Scooter

Bajaj Chetak New Electric Scooter

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பஜாஜ் சேடக்கின் இந்த புதிய வேரியன்ட் ப்ளூ 3202 ஆகும். இந்த ஸ்கூட்டரின் சிறப்பு என்னவென்றால், இந்த மாடல் முந்தைய வகையை விட மலிவானது ஆகும். அதுமட்டுமில்லாமல், அந்த வகைகளை விட அதிக வரம்பையும் தருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Bajaj Auto

Bajaj Auto

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 137 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது என்று நிறுவனம் கூறுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேடக் ப்ளூ 3202 வேரியண்டுடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  பஜாஜ் சேடக்கின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது.

35
Bajaj Chetak Features

Bajaj Chetak Features

சேடக் ப்ளூ 3202 விலை அதன் அர்பேன் வேரியன்ட்டை விட ரூ.8 ஆயிரம் குறைவு. அதே நேரத்தில், இதன் பிரீமியம் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.48 லட்சம். மற்ற ஸ்கூட்டர்களைப் போலவே, இந்த பஜாஜ் ஸ்கூட்டரும் கூடுதல் விலையில் TecPac உடன் வருகிறது. ஸ்கூட்டருடன் இதை வாங்குவதன் மூலம், EV உடன் அதிக அம்சங்களைப் பெறுவீர்கள். இந்த மின்சார ஸ்கூட்டரில் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், USB சார்ஜிங் போர்ட் போன்ற பல அம்சங்களையும் கொண்டுள்ளது.

45
Bajaj Chetak Blue 3202 Price

Bajaj Chetak Blue 3202 Price

இந்த சேடக் ஸ்கூட்டரின் வரம்பை அதிகரிக்க ஸ்போர்ட் மற்றும் கிரால் மோடுகளுடன் ஈகோ மோடும் சேர்க்கப்பட்டுள்ளது. பஜாஜ் சேடக் ப்ளூ 3202 சந்தையில் இருக்கும் மின்சார ஸ்கூட்டர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்க வந்துள்ளது என்றே கூறலாம்.  இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இந்திய சந்தையில் ஏற்கனவே இருக்கும் ஏத்தர் ரிஸ்ட்டா, ஓலா மற்றும் டிவிஎஸ் ஐகியூப் போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உள்ளது.

55
Bajaj Chetak Blue 3202

Bajaj Chetak Blue 3202

சந்தையில் இந்த ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போது பஜாஜ் ஆட்டோ இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை தொடங்கியுள்ளது.  2000 ரூபாய் மட்டுமே டோக்கன் தொகையுடன் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய முடியும். இந்த ஸ்கூட்டர் நான்கு வண்ண வகைகளில் சந்தையில் கிடைக்கிறது. புரூக்ளின் பிளாக், சைபர் ஒயிட், இண்டிகோ மெட்டாலிக் மற்றும் மேட் கோர்ஸ் கிரே நிறம் ஆகியவை இதில் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Car Offers: ரூ.4.99 லட்சம் முதல் கார்கள்! தீபாவளி சிறப்புச் சலுகையில் கிடைக்கும் அதிரடி தள்ளுபடிகள்
Recommended image2
Best Selling Bikes: 6 மாதங்களில் 21 லட்சம் பைக்குகள் விற்பனை! இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட பைக் எது?
Recommended image3
715 கி.மீ ரேஞ்ச், 1156 hp பவர்: நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாகும் மிரட்டலான 5 எலெக்ட்ரிக் கார்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved