நடுத்தர மக்களின் பேவரைட் மைலேஜ் பைக்குகள் இவைதான்.. ரேட் ரொம்ப கம்மி
இந்தியாவில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலையால், அதிக மைலேஜ் தரும் கம்யூட்டர் பைக்குகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இவை தினசரி பயணங்களுக்கு ஏற்ற குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட பைக்குகளாகும்.

அதிக மைலேஜ் பைக்குகள்
இந்தியாவில் தினசரி பயணத்திற்கு பைக் வாங்குபவர்கள் அதிக கவனம் செலுத்துவது மைலேஜ் மீதுதான். உயர்ந்து வரும் பெட்ரோல் விலை காரணமாக, குறைந்த செலவில் அதிக தூரம் செல்லக்கூடிய பைக்குகளே பெரும்பாலானோரின் முதல் தேர்வாக உள்ளன. அதனால்தான் 100சிசி மற்றும் 125சிசி இன்ஜின் கொண்ட கம்யூட்டர் பைக்குகள் இந்திய சந்தையில் எப்போதும் அதிக வரவேற்பைப் பெறுகின்றன. இந்த வகை பைக்குகள் அலுவலகம், கல்லூரி மற்றும் தினசரி தேவைகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிப்பது பஜாஜ் பிளாட்டினா 100. இது இந்தியாவின் மிக மலிவு விலை கொண்ட கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 100சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக், வேகம் மற்றும் பவர் விட எரிபொருள் சிக்கனத்தையே மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட பயணங்களிலும் சௌகரியமாக செல்ல உதவும் லாங்-டிராவல் சஸ்பென்ஷன் மற்றும் மென்மையான இருக்கை அமைப்பு இதன் முக்கிய அம்சங்கள். நிறுவனத்தின் தகவல்படி, பஜாஜ் பிளாட்டினா 100 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65,407 ஆகும்.
மலிவு விலை பைக்
மற்றொரு பிரபலமான கம்யூட்டர் பைக் ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர். இது 125சிசி இன்ஜின் கொண்டதால், சற்று கூடுதல் பவர் தேவையுள்ளவர்களுக்கு ஏற்ற தேர்வாக பார்க்கப்படுகிறது. நகர மற்றும் கிராமப்புற சாலைகளில் சமநிலையான செயல்திறன் வழங்கும் இந்த பைக், தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. சாதாரண ஓட்டத்தில், இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை, மைலேஜ் மற்றும் நம்பகத்தன்மை ஆகிய மூன்றையும் ஒரே நேரத்தில் எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த இரண்டு பைக்குகளும் சிறந்த தேர்வாக உள்ளன. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் நீண்ட கால பயன்பாடு என்பது இந்த கம்யூட்டர் பைக்குகளின் கூடுதல் பலமாகும். அதனால் தான், இந்தியாவில் மைலேஜ் முக்கியம் என நினைக்கும் பயணிகளின் மனதில் இவை தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.

