- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரங்க மிகவும் ஒழுக்கமானவங்க.! இவங்க சுய கட்டுப்பாடு வேற யாருக்கும் வராது.!
Astrology: இந்த 4 ராசிக்காரங்க மிகவும் ஒழுக்கமானவங்க.! இவங்க சுய கட்டுப்பாடு வேற யாருக்கும் வராது.!
Zodiac signs with high discipline: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக ஒழுக்கம் கொண்ட ராசிகள்
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், அமைதியான மற்றும் நிலையான வாழ்க்கை வாழ்வதற்கும் ஒழுக்கம் என்பது மிக அத்தியாவசியமான குணமாகும். ஒழுக்கம் என்பது விதிகளை பின்பற்றுவது மட்டுமல்லாமல், கடின உழைப்பு, பொறுமை, சுய கட்டுப்பாடு, சரியான திட்டமிடல் ஆகியவற்றின் கலவையாகும். ஜோதிடத்தின் படி சில ராசிகள் இயல்பாகவே ஒழுக்கமான குணங்களை பெற்றிருக்கின்றன. நில ராசிகளின் ஆதிக்கம் கொண்ட ராசிகள் பெரும்பாலும் ஒழுக்கமானவர்களாக கருதப்படுகின்றனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆளப்படுபவர்கள். சனிபகவான் கடமை, கட்டுப்பாடு மற்றும் கடின உழைப்பின் கிரகம் ஆவார். மக் ராசிக்காரர்கள் தெளிவான நீண்ட கால இலக்குகளை கொண்டிருப்பார்கள். இலக்குகளை அடைவதற்காக அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கடினமாக உழைக்கவும், தங்களை தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ளவும் தயாராக இருப்பார்கள். இவர்கள் தங்கள் கடமைகளுக்கும், பொறுப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதிலிருந்து தவறவே மாட்டார்கள். எந்த ஒரு செயலையும் நடைமுறை சார்ந்து, திட்டமிட்ட அணுகுமுறையுடன் செய்வார்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல், விதிகளைப் பின்பற்றி செயல்படுவது இவர்களின் ஒழுக்கத்தை காட்டுகிறது. சனி பகவானின் ஆதிக்கம் இவர்களை சோம்பலின்றி தொடர்ந்து இயங்க வைக்கிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். புதன் பகவான் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், பகுத்தறிவு மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றின் காரணமான கிரகமாகும். இவர்கள் விவரங்களில் அதிகம் கவனம் செலுத்துபவர்கள். எந்த ஒரு செயலையும் மிகச் சரியாக, எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இவர்களை மிகுந்த ஒழுக்கத்துடன் செயல்பட தூண்டுகிறது. தங்கள் சுற்றுப்புறம், பணி, தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும் முறையான அமைப்பை வைத்திருக்க விரும்புவார்கள். ஒரு தெளிவான கால அட்டவணை அல்லது தினசரி வழக்கம் இவர்களது ஒழுக்கத்திற்கு அடிப்படையாகும். இவர்கள் தங்களை தாங்களே விமர்சனம் செய்து கொள்ளும் குணம் படைத்தவர்கள். தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு மேலும் சிறப்பாகவும் ஒழுக்கத்துடனும் செயல்படுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிர பகவானால் ஆளப்படுபவர்கள். சுக்கிரன் அழகு, வசதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான கிரகம் ஆவார். ரிஷப ராசிக்காரர்கள் உறுதியான குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை அடைய எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் பொறுமையுடனும், விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். நிதி சார்ந்த விஷயங்களில் இவர்கள் அதிக ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். பணத்தை எப்படி சேமிப்பது? எப்படி பயன்படுத்துவது? என்பதில் தெளிவாக இருப்பார்கள். இவர்களது ஒழுக்கம் அவசரமின்றி நிதானமாக செயல்படுவதில் வெளிப்படுகிறது. இலக்கை நோக்கி மெதுவாகவும், அதே சமயம் உறுதியாகவும் செல்வார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோ கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவை இரண்டும் தீவிர உந்துதல் மற்றும் மாற்றத்திற்கான கிரகங்களாகும். இவர்கள் மிக ஆழமான சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தைக் கொண்டிருப்பார்கள். இலக்குகளில் கவனச் சிதறல்கள் இல்லாமல் செயல்படுவார்கள். இவர்கள் மிகுந்த மன உறுதிப்பாடு கொண்டவர்கள். ஒரு விஷயத்தை முடிவெடுத்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். எத்தனை தடைகள் வந்தாலும் அதை உடைத்து முன்னேற தேவையான ஒழுக்கத்தை கடைபிடிப்பார்கள். இவர்களது ஒழுக்கம் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களு காட்டாமல் கட்டுப்படுத்துவதிலும், தாங்கள் நினைத்ததை அடைவதில் உள்ள உறுதியிலும் வெளிப்படுகிறது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஜோதிடத்தின் படி மேற்குறிப்பிடப்பட்ட ராசிகள் ஒழுக்கமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்த ராசிக்காரர்களை ஆளும் கிரகங்கள் அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கின்றன. இருப்பினும் ஒருவரின் உண்மையான ஒழுக்கம் என்பது அவரது ராசியை மட்டும் சார்ந்ததல்ல. அவரது வளர்ப்பு, தனிப்பட்ட முயற்சி மற்றும் சூழ்நிலைகளை சார்ந்தது. மேற்குறிப்பிடப்பட்ட ராசிகளில் பிறந்தவர்களுக்கு கிரக அமைப்புகள் ஒழுக்கம், பொறுப்பு, விடாமுயற்சி போன்ற குணங்களை இயல்பாகவே அதிகப்படுத்தி அவர்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்கின்றன. எந்த ராசியாக இருந்தாலும் சுய கட்டுப்பாடு, பொறுமை, ஒழுக்கம் ஆகியவையே உண்மையான பலமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)