- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரங்கிட்ட பேச்சு குடுத்தாலே வம்பு வந்துடுமாம்.! மோசமான ஆளுமையுடன் இருப்பாங்களாம்.!
Astrology: இந்த 4 ராசிக்காரங்கிட்ட பேச்சு குடுத்தாலே வம்பு வந்துடுமாம்.! மோசமான ஆளுமையுடன் இருப்பாங்களாம்.!
Zodiac signs with worst attitude: ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் பிறரிடம் மோசமாக நடந்து கொள்ளும் குணம் படைத்தவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மோசமான ஆளுமை கொண்ட ராசிகள்
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள் மற்றும் பண்புகள் உண்டு. சில ராசிக்காரர்கள் அனைவரிடமும் கருணை மற்றும் அன்புடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் சில ராசிக்காரர்கள் தங்கள் தனித்தன்மையான அணுகுமுறைகள் அல்லது பழக்கவழக்கங்களால் மற்றவர்களிடையே எதிர்மறையாக தோன்றுகின்றனர். அப்படி பிறரிடம் கொடூரமாக நடந்து கொள்ளும் அல்லது மோசமான ஆளுமைகளுடன் விளங்கும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் என்பது ஆற்றல், ஆக்ரோஷம், கோபம் ஆகியவற்றுடன் தொடர்புடைய கிரகமாகும். இந்த ராசிக்காரர்கள் தைரியமானவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் அவர்களின் அவசரமான முடிவுகளும், பொறுமையின்மையும் சில சமயங்களில் மோதல்களுக்கு வழிவகுக்கும்.
மற்றவர்களின் உணர்வுகளை புறந்தள்ளி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்று அவர்கள் அவசரப்படுகின்றனர். இது அகங்காரமாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ தோன்றுகிறது. இந்த பண்பு அவர்களை மோசமான அணுகுமுறை உள்ளவர்களாக சித்தரிக்கிறது.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு அமைதியாகவும், மனவலிமை நிறைந்தவர்களாகவும் காணப்படுவார்கள். ஆனால் அவர்களிடம் பிடிவாத குணங்கள் நிறைந்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்களை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறுகிறது. அவர்கள் ஒரு முடிவெடுத்து விட்டால் அதை மாற்றுவது மிகவும் கடினம். அவர்களின் இந்த போக்கு உறவுகளில் மோதல்களை ஏற்படுத்துகிறது.
மேலும் அவர்களின் விமர்சன பண்பு மற்றவர்களை எளிதில் புண்படுத்தும். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவும், நேரடியாகவும் கூறுவதால் மற்றவர்களுக்கு கடுமையாக தோன்றலாம். இந்த பண்பு அவர்களை மோசமான அணுகுமுறை கொண்டவர்களாக கருத வைக்கலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி ஆழத்திற்கும், உறுதியான மனநிலைக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால் அவர்களின் மனநிலை சில சமயங்களில் கடுமையானதாகவோ அல்லது புரிந்து கொள்வதற்கு கடினமானதாகவோ தோன்றலாம். அவர்கள் தங்கள் கருத்துக்களை உறுதியாக வெளிப்படுத்துவதால் பிடிவாதமாகவோ அல்லது ஆக்ரோஷமாகவோ தோன்றலாம்.
அவர்களின் உணர்ச்சித் தீவிரம் என்பது மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். மேலும் அவர்கள் சூழ்ச்சி செய்யும் அல்லது பழிவாங்கும் நோக்கம் கொண்டவர்களாக இருக்கலாம். இதன் காரணமாக விருச்சிக ராசியினர் மோசமான அணுகுமுறை உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்திற்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் கடுமையான அணுகுமுறையை கொண்டவர்கள். உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவார்கள். இது மற்றவர்களுக்கு அலட்சியமாக தோன்றுகிறது. அவர்கள் தங்கள் இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பதால் மற்றவர்களின் உணர்வுகளை புறக்கணிப்பதாக தோன்றலாம். இது அவர்களை இரக்கமற்றவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் பிறருக்கு காட்டுகிறது.
எதையும் அவநம்பிக்கையுடன் பார்க்கும் அவர்களின் கண்ணோட்டம் அவர்கள் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. இதன் காரணமாகவே மகர ராசிக்காரர்கள் மோசமானவர்களாக கருதப்படுகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)