- Home
- Astrology
- Astrology: சனி பகவான் உருவாக்கும் சுப யோகம்.! தசராவுக்குப் பிறகு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!
Astrology: சனி பகவான் உருவாக்கும் சுப யோகம்.! தசராவுக்குப் பிறகு இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!
Shadashtak Yog: சனி மற்றும் புதன் பகவான் இருவரும் இணைந்து உருவாக்கும் சதாஷ்டக யோகம் காரணமாக சில ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சதாஷ்டக யோகம் 2025
வேத ஜோதிடத்தில் சனிபகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். “நீதிமான்” என்று அழைக்கப்படும் இவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை தர வல்லவர். இவர் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை இருப்பார். நீண்ட காலமாக ஒரு ராசிகள் பயணிப்பதால் பிற கிரகங்களுடன் இணைந்து அவ்வப்போது யோகங்களை உருவாக்குவார்.
தற்போது மீன ராசியில் பயணித்து வரும் அவர், 2027 வரை அந்த ராசியில் இருப்பார். இந்த நிலையில் அக்டோபர் மாதத்தில் அவர் புதன் பகவான் உடன் இணைந்து சதாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார்.
சனி புதன் சேர்க்கை
சதாஷ்டக யோகம் என்பது கிரகங்கள் ஒன்றுக்கொன்று ஆறாவது அல்லது எட்டாவது வீட்டில் இருக்கும் பொழுது உருவாகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி காலை 6:00 மணிக்கு சனியும் புதனும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் அமைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர்.
புதன் துலாம் ராசியிலும், சனி பகவான் மீன ராசியிலும் அமைவதால் தசராவுக்குப் பிறகு இந்த சுபயோகம் உண்டாகிறது. இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அடைய உள்ளனர். அந்த ராசிக்காரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி புதன் இணைந்து உருவாக்கும் சதாஷ்டக இணைப்பால் சிறப்பு நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எதிர்மறை ஆற்றல்கள் குறைந்து, நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். எதிர்காலத்திற்காக செல்வத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
கல்வி பயிலும் மாணவர்களும் நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். குடும்பத்திலும், தொழில் வாழ்க்கையிலும் எதிர்பாராத திருப்பங்களுடன் வெற்றிகளும் கிடைக்கும். வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான விஷயங்களில் அவர்களின் கனவு நிறைவேறும்.
கடகம்
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் மற்றும் சனி பகவானின் இணைவு பல துறைகளில் நன்மைகளைக் கொண்டு வரும். முன்பு இருந்து வந்த ஏராளமான தடைகள் மற்றும் பின்னடைவுகள் விலகி முன்னேற்றத்தை காண்பீர்கள். ஏதாவது ஒரு காரணத்தால் தடைபட்டு நின்ற பணிகள் அனைத்தும் தற்போது வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்ப வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
தாய் வழி உறவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் மனம் அமைதி பெறும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். சொத்து வாங்குவது, விற்பது போன்றவற்றில் வெற்றியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு சதாஷ்டக யோகம் மிகுந்த நன்மைகள் தரும். புதன் மற்றும் சனியின் சேர்க்கை வெற்றியையும், லாபத்தையும் ஈட்டித் தரும். ராசியின் லக்னத்தில் சனி இருப்பதால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் வெற்றியை அடைய முடியும். நீண்ட நாட்களாக போராடிக் கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். இத்தனை நாட்களாக நிலவி வந்த உடல்நலக் கோளாறுகள் படிப்படியாக குறையும்.
உடல் நலம் மேம்படுவதோடு மனநலமும் மேம்படும். உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் உணர்வீர்கள். இதுவரை குழப்பமாக இருந்து வந்த நீங்கள், தன்னம்பிக்கை அதிகரித்து, தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றியைக் காண்பீர்கள்.