MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • astrology : Love வேணாம்... Single ஆகவே வாழ ஆசைப்படும் ராசிகள்

astrology : Love வேணாம்... Single ஆகவே வாழ ஆசைப்படும் ராசிகள்

சுய அமைதி, சொந்த லட்சியம் மற்றும் 'ஹைப்பர்-இண்டிபென்டன்ட்' (Hyper-Independent) குணாம்சம் கொண்ட ராசிக்காரர்கள் யார்? தனிமையை ஏக்கமாகப் பார்க்காமல் தங்களின் மிகப்பெரிய பலமாக மாற்றிக் கொள்ளும் ராசிகள் குறித்து அறிய இதைப் படியுங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Aug 13 2026, 02:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சிங்கிளாக வாழ விரும்பும் ராசிக்காரர்கள் :
Image Credit : Getty

சிங்கிளாக வாழ விரும்பும் ராசிக்காரர்கள் :

இன்றைய நவீன உலகில் காதல், திருமணம் போன்ற உறவு முறைகளைக் காட்டிலும், தன் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் சுய முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசியினர் பிறப்பிலேயே சுயசார்புத் தன்மையும் சுதந்திர எண்ணமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் காதலை முற்றிலும் வெறுப்பவர்கள் அல்ல; மாறாக, தங்களின் தனித்துவத்தை இழக்க விரும்பாது 'சிங்கிளாக' வாழ்வதையே வரமாகக் கருதுபவர்கள். காதல், திருமணம் போன்ற பொறுப்புக்கள் அல்லது சிறிய வரையறைக்குள் தங்களை சிக்க வைத்துக் கொள்ளாமல் சுதந்திர பறவைகளாக வலம் வர வேண்டும் என விரும்புவர்கள். இத்தகைய சிறப்புமிக்க ராசிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கன்னி :
Image Credit : Asianet News

கன்னி :

கன்னி ராசியினர் தங்களின் வாழ்க்கையில் மிக உயர்ந்த கட்டமைப்பு மற்றும் சீரான தன்மையை விரும்புபவர்கள். இதனால் இவர்களுக்கு கட்டுப்பாடுகளுக்குள் சிக்கி இருக்க பிடிக்காது. அது மிகப் பெரிய மன அழுத்தத்தை இவர்களுக்கு கொடுக்கும்.

உயர் எதிர்பார்ப்புகள்: தங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கடுமையான அளவுகோல்களை வைத்திருப்பார்கள்.

சுயசார்பு: பிறரைச் சார்ந்து வாழ்வதை விட, தங்களின் இலக்குகளை நோக்கித் தனியாகப் பயணிப்பதையே இவர்கள் நிம்மதியாக உணர்கிறார்கள்.

Related Articles

Related image1
attractive zodiac signs : மற்றவர்களை அதிக ஈர்க்கும் திறன் கொண்ட 5 ராசிகள்
Related image2
zodiac signs : மற்றவர்களை அதிகம் புரிந்து கொண்டு நடக்கும் 5 ராசிகள்
36
தனுசு :
Image Credit : Asianet News

தனுசு :

தனுசு ராசியின் அதிபதி குரு என்பதால், இவர்கள் புதிய அனுபவங்களையும் பயணங்களையும் விரும்புபவர்களாக இருப்பார்கள். தங்களுக்குள் இருக்கும் தனித்துவமான ஆளுமையை வெளிக் கொண்டு வர குடும்பம், காதல் போன்றவை தடையாக இருக்கும் என நினைப்பவர்கள்.

கட்டுப்பாடுகளுக்கு பயம்: காதல் எனும் பெயரில் தங்களின் சுதந்திரத்திற்குச் சிறிய கட்டுப்பாடு வந்தாலும் அதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

தனிமையின் இனிமை: புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் உலகத்தைச் சுற்றிப் பார்ப்பதிலுமே இவர்களின் முழுக் கவனமும் இருக்கும்.

46
மகரம் :
Image Credit : ChatGPT

மகரம் :

மகர ராசியினர் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால், தீவிரமான உழைப்பிற்கும் லட்சியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். எப்படியாவது சாதிக்க வேண்டும். பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியம் கொண்டவர்கள் என்பதால் திருமண வாழ்க்கையை சுமையாக கருதக் கூடியவர்கள்.

வாழ்க்கைப் பாதை: உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளைக் காட்டிலும் தொழில்முறை வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கே முதலிடம் தருவார்கள்.

முதிர்ச்சியான சிந்தனை: தவறான நபருடன் இணைந்து மன அமைதியை இழப்பதை விட, தனியாக வாழ்ந்து சாதிப்பதே சிறந்தது என்பது இவர்களின் கொள்கை.

56
கும்பம் :
Image Credit : Getty

கும்பம் :

கும்ப ராசியினர் இயல்பாகவே சமூகக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கக்கூடிய சிறப்பு மிக்கவர்கள். தனிமையை அதிகம் விரும்பக் கூடியவர்கள் என்பதால் இவர்களுடன் மற்றவர்கள் நெருக்கம் காட்டுவதை கூட தொல்லையாக நினைப்பார்கள்.

மன அமைதி: தங்களின் தனிப்பட்ட உலகத்தில் அமைதியாக இருப்பதை அதிகம் விரும்புவார்கள்.

உணர்ச்சிப் பாதுகாப்பு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுவதால், தேவையில்லாத மன அழுத்தங்களைத் தவிர்க்கத் தனிமையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

66
ஜோதிடக் குறிப்பு:
Image Credit : Getty

ஜோதிடக் குறிப்பு:

தனித்து வாழ்வது என்பது பலவீனமல்ல; மாறாக, தங்களின் எல்லையை உணர்ந்து சுயமரியாதையோடு வாழ்வதற்குக் கிடைத்த மிகச்சிறந்த மனவலிமையாகும். உயர்ந்த லட்சியம், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் அதற்கு மற்ற விஷயங்கள் தடையாக இருக்குமோ, தங்களின் லட்சியத்தை அடைய உறவுகள் தடையாக இருந்து விடுமோ என்பதால் இந்த ராசிக்காரர்கள் காதல், திருமணம் போன்றவற்றிற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளிப்பது கிடையாது.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Evil Eye: கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் 5 ராசிகள்! எதிரிகளை அடையாளம் காண முடியாமல் திணறுவார்கள்.!
Recommended image2
astrology: புரிந்து கொள்ளவே முடியாத வினோத குணம் படைத்த ராசிகள்
Recommended image3
Maha Bhagya Yoga : மீனத்தில் சனி வக்கிரப் பயணம்! மகா பாக்ய யோகத்தால் 4 ராசிகளுக்கு இனி கஷ்ட காலம் ஓவர்!
Related Stories
Recommended image1
attractive zodiac signs : மற்றவர்களை அதிக ஈர்க்கும் திறன் கொண்ட 5 ராசிகள்
Recommended image2
zodiac signs : மற்றவர்களை அதிகம் புரிந்து கொண்டு நடக்கும் 5 ராசிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved