MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • attractive zodiac signs : மற்றவர்களை அதிக ஈர்க்கும் திறன் கொண்ட 5 ராசிகள்

attractive zodiac signs : மற்றவர்களை அதிக ஈர்க்கும் திறன் கொண்ட 5 ராசிகள்

வெளித்தோற்றத்தை விட ஒருவரின் Aura எனப்படும் ஆற்றல் மண்டலமே அவரை பிறருக்குப் பிடித்தமானவராக மாற்றுகிறது. முதல் சந்திப்பிலேயே அனைவரையும் சுண்டி இழுக்கும் வசீகரமும், ஈர்ப்பு விசையும் கொண்ட ராசிகள் எவை? அவற்றின் ஜோதிட ரகசியங்களை அறிய இதைப் படியுங்கள்!

2 Min read
Author : Priya Velan
Published : Aug 05 2026, 02:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மற்றவர்களை அதிகம் ஈர்க்கும் ராசிக்காரர்கள் :
Image Credit : Asianet News

மற்றவர்களை அதிகம் ஈர்க்கும் ராசிக்காரர்கள் :

சிலர் கூட்டத்திற்குள் நுழைந்த உடனேயே அனைவரின் கவனமும் இயல்பாகவே அவர்கள் பக்கம் திரும்பிவிடும். அவர்களின் பேச்சோ, சிரிப்போ அல்லது ஒரு சிறிய பார்வை கூட சுற்றி இருப்பவர்களைக் கட்டிப்போடும் வசீகரத்தைக் கொண்டிருக்கும். இந்த காந்தப் போன்ற ‘ஆளுமை ஈர்ப்பு’ (Charisma) என்பது வெறும் தோற்றத்தால் மட்டும் வருவதில்லை; அவர்களின் கிரக நிலைகள் மற்றும் ராசி குணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்களின் இயல்பான நடத்தை மற்றும் ஆற்றலால் மற்றவர்களை எளிதில் தன்வசம் இழுக்கும் திறன் 5 ராசிகளுக்கு இயற்கையாகவே உண்டு. இவர்கள் பேசாவிட்டாலும் கூட இவர்கள் எப்போது வருவார்கள், இவர்கள் கூட இருந்தாலே போதும் என எதிர்பார்க்கும் ஒரு விதமான தனித்துவம் சில ராசிக்காரர்களிடம் தான் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சிம்மம் :
Image Credit : Asianet News

சிம்மம் :

சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியினர், எங்குச் சென்றாலும் தனித்துத் தெரியும் தலைமைத்துவமும் மிடுக்கான ஆளுமையும் கொண்டவர்கள். இவர்களின் தன்னம்பிக்கை நிறைந்த கம்பீரமான பேச்சும், தாராள மனப்பான்மையும் அனைவரையும் வியக்க வைக்கும். கூட்டத்தில் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்ளாமலேயே, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் இயல்பான ராயல் வசீகரம் இவர்களிடம் உண்டு.

Related Articles

Related image1
zodiac : நண்பேன்டா... நட்புக்காக உயிரையே கொடுக்கும் 5 ராசிக்காரர்கள்
Related image2
Loving and caring : மனைவியை ராணி போல் நடத்தும் 6 கணவன் ராசிகள்
36
விருச்சிகம் :
Image Credit : Asianet News

விருச்சிகம் :

செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்த விருச்சிக ராசியினரிடம் ஒரு விவரிக்க முடியாத ஆழமான மர்மமும் ஈர்ப்பும் இருக்கும். இவர்களின் கூர்மையான பார்வையும், அமைதியான ஆனால் அழுத்தமான ஆளுமையும் எதிரில் இருப்பவர்களைத் தானாகவே ஈர்க்கும். அளவுக்கு அதிகமாகப் பேசாமல், அளவோடு பேசி தங்களைச் சுற்றி ஒரு ரகசியமான சுவாரஸ்யத்தை உருவாக்கி வைத்திருப்பது இவர்களின் தனித்துவமாகும்.

46
ரிஷபம் :
Image Credit : Asianet News

ரிஷபம் :

அழகியலின் கிரகமான சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசியினர், தங்களுடைய ரசனை மற்றும் நேர்த்தியான தோற்றத்தால் அனைவரையும் கவருவார்கள். உடை உடுத்துவது முதல் பேசும் விதம் வரை அனைத்திலும் ஒரு உயர்தர நயத்தைக் கடைப்பிடிப்பார்கள். இவர்களின் அமைதியான, சாந்தமான அணுகுமுறையும், பாதுகாப்பான உணர்வைத் தரும் அருகாமையும் மற்றவர்களை இவர்களிடம் மீண்டும் மீண்டும் வரச் செய்யும்.

56
மிதுனம் :
Image Credit : Asianet News

மிதுனம் :

புதனை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசியினரின் ஈர்ப்பு சக்தி அவர்களின் கூர்மையான அறிவு மற்றும் உரையாடல் திறனில் ஒளிந்துள்ளது. எந்த தலைப்பைப் பற்றியும் சுவாரஸ்யமாகப் பேசும் ஆற்றலும், எந்தக் குழுவிலும் எளிதில் கலந்துவிடும் இயல்பும் இவர்களின் பலம். தங்களின் நகைச்சுவை உணர்வாலும், சுறுசுறுப்பான நடத்தையாலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலை எப்போதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள்.

66
தனுசு :
Image Credit : Asianet News

தனுசு :

வியாழன் கிரகத்தின் அருளைப் பெற்ற தனுசு ராசியினர், தங்களின் எல்லையற்ற ஆற்றலாலும் நேர்மறை எண்ணங்களாலும் அனைவரையும் கவர்ந்திழுப்பார்கள். பயமறியாத இவர்களின் தைரியமும், நேர்மறையான எண்ணங்களும், பேச்சும், எப்போதும் புன்னகையோடு இருக்கும் உற்சாகமான முகமும் மற்றவர்களுக்கு நம்பிக்கைய அளிக்கும். புதுமைகளை விரும்புவதும், எதையும் வெளிப்படையாகப் பேசும் இவர்களின் நேர்மையும் இவர்களை நோக்கி ஆட்களை ஈர்க்கும் முக்கிய காரணியாகும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
zodiac signs : மற்றவர்களை அதிகம் புரிந்து கொண்டு நடக்கும் 5 ராசிகள்
Recommended image2
Ezharai Sani: ஒருவருக்கு வாழ்க்கையில் எத்தனை முறை ஏழரை சனி வரும்? அதிர்ச்சி தரும் ஜோதிட உண்மைகள்.!
Recommended image3
Astrology: மிதுன ராசியில் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
Related Stories
Recommended image1
zodiac : நண்பேன்டா... நட்புக்காக உயிரையே கொடுக்கும் 5 ராசிக்காரர்கள்
Recommended image2
Loving and caring : மனைவியை ராணி போல் நடத்தும் 6 கணவன் ராசிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved