MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs: தோல்வியை கண்டு பயப்படாத 5 ராசிகள்.! எவ்வளவு அடி வாங்கினாலும் பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து வருவாங்களாம்.!

Zodiac Signs: தோல்வியை கண்டு பயப்படாத 5 ராசிகள்.! எவ்வளவு அடி வாங்கினாலும் பீனிக்ஸ் பறவை மாதிரி எழுந்து வருவாங்களாம்.!

Zodiac Signs that Never Give Up: வாழ்க்கையில் சோதனைகளும், தோல்விகளும் அனைவருக்கும் வரும். ஆனால் சில ராசியில் பிறந்தவர்கள் எவ்வளவு அடி விழுந்தாலும் உறுதியாக எழுந்து நிற்பார்கள். அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : May 17 2026, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Zodiac Signs that Never Give Up
Image Credit : Gemini AI

Zodiac Signs that Never Give Up

ஜோதிடத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்துவமான குணங்கள் உண்டு. வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது சகஜமே. சிலர் தோல்வியடைந்துவிட்டால் அப்படியே முடங்கிவிடுவார்கள். ஆனால் சிலருக்கு எவ்வளவு பெரிய அடி விழுந்தாலும் அப்படியே விழுந்து கிடக்கக் கூடாது, மீண்டும் எழுந்து வர வேண்டும் என்கிற மன உறுதி கொண்டு உயிர்த்தெழுவார்களாம். சாம்பலில் இருந்து மீண்டு எழும் பீனிக்ஸ் பறவை போல ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் பல மடங்கு வீரியத்துடன் எழுந்து வருவார்களாம். அப்படி அசுரத்தனமான மன வலிமையும், தோல்வியைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட ஐந்து ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
மேஷம்
Image Credit : Pixabay

மேஷம்

கால புருஷ தத்துவத்தின் முதல் ராசியாக மேஷ ராசி விளங்கி வருகிறது. நெருப்பு ராசியான இந்த ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இவர் ஆற்றல், வீரம், விவேகம், உத்வேகம் ஆகியவற்றின் காரகராவார். எனவே செவ்வாய் பகவான் ஆட்சி செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு பயம் என்ற வார்த்தையை அகராதியில் இருக்காது. தோல்வியை சந்தித்தால் சில நிமிடங்கள் மட்டுமே வேதனைப்படுவார்கள். அடுத்த கனமே அடுத்து என்ன செய்யலாம்? என்பது குறித்து களத்தில் இறங்கி விடுவார்கள். இவர்களை ஒரு சவாலோ அல்லது தோல்வியோ முடக்கி விட முடியாது. கீழே விழும் வேகமாக ஓடும் குதிரையைப் போல சவால்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டே இருப்பார்கள்.

Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்

Related Articles

Related image1
Zodiac Signs: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!
Related image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
37
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனை அதிபதியாகக் கொண்டவர்கள். இவர்கள் இயல்பாகவே தலைமைப் பண்பும், அசாத்திய தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். ஒரு சிங்கம் காயப்பட்டாலும் அதன் கம்பீரம் குறையாது என்பது போல தோல்வியால் தற்காலிகமாக சோர்ந்து போனாலும் தங்கள் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். யாராலும் என்னை வீழ்த்த முடியாது என்கிற எண்ணமே இவர்களை மீண்டும் அரியணையில் உட்கார வைக்கும். தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முன்பை விட அதிக பலத்துடன் ராஜாதி ராஜனாக வலம் வருவார்கள்.

47
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

பீனிக்ஸ் பறவை என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணம் விருச்சிக ராசிக்காரர்கள் தான். இவர்களையும் செவ்வாய் பகவானே ஆள்கிறார். விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கை பெரும்பாலும் எளிதாக இருக்காது. பல துரோகங்களையும், அடியையும் சந்திப்பார்கள். இவர்கள் தங்கள் வலியை மூலதனமாகக் கொண்டு மீண்டும் எழுந்து வருவார்கள். தங்களை வீழ்த்தியவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி இமயத்தின் உச்சிக்கே செல்லும் வல்லமை இவர்களுக்கு உண்டு. இவர்களின் மன வலிமையை யாராலும் உடைக்க முடியாது.

57
தனுசு
Image Credit : Pixabay

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் அனைத்திலும் நன்மை காணும் ஒரு அற்புதம் வாய்ந்த ராசிக்காரர்கள் ஆவார்கள். இவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமே நேர்மை எண்ணம் தான். எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் இதுவும் கடந்து போகும், எதிலும் ஏதோ ஒரு நல்லது ஒளிந்திருக்கிறது என்று நினைத்து தங்களை தங்களை தேற்றிக் கொள்வார்கள். கவலை என்ற இருள் சூழ்ந்தாலும் நகைச்சுவை உணர்வாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையாலும் வேகமாக அதிலிருந்து வெளிவந்து விடுவார்கள். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, புதிய இலக்குகளை நோக்கி பாய்ந்து செல்வார்கள்.

67
மகரம்
Image Credit : Pixabay

மகரம்

மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆளுகையின் கீழ் வருபவர்கள். இவர்கள் கடின உழைப்பிற்கும், பொறுமைக்கும் பெயர் பெற்றவர்கள். வாழ்க்கையில் ஆரம்பக் கட்டத்தில் பல தடைகளையும், தோல்விகளையும் சந்திப்பார்கள். ஆனால் ஒருபோதும் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டார்கள். சோர்ந்து போகவும் மாட்டார்கள். பாறையை துளைக்கும் உளி போல மெல்லமாகவும், நிதானமாகவும் உழைத்து எவ்வளவு பெரிய தோல்வி வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு இறுதியில் தாங்கள் நினைத்த இலக்கை அடைந்தே தீருவார்கள். இவர்களின் வீழ்ச்சி தற்காலிகமானது தான். ஆனால் இவர்களில் எழுச்சி நிரந்தரமானது.

77
முக்கிய குறிப்பு
Image Credit : Asianet News

முக்கிய குறிப்பு

மனவலிமை என்பது எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு சக்திதான். அதை சரியான முறையில் பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும், எத்தகைய தோல்வி ஏற்பட்டாலும் அதிலிருந்து எளிதில் மீண்டு வர முடியும். ஜோதிட ரீதியாக மேற்பட்ட ராசிகளுக்கு இயல்பாகவே போராட்ட குணம் அதிகம் என்றாலும் ஒருவருடைய தனிப்பட்ட ஜாதகத்தில் லக்னம், செவ்வாய் மற்றும் சூரியனின் நிலையைப் பொறுத்து இந்த குணங்கள் இன்னும் மாறுபடலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: காதல் திருமணத்தில் 100% வெற்றி பெறும் 5 ராசிக்காரர்கள்! உங்க ராசி இதுல இருக்கா பாருங்க!
Recommended image2
Zodiac Signs: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!
Recommended image3
Sani Bhagavan: சூரியனின் வெப்பமும், சாயா தேவியின் தவமும்.! சனி பகவான் கரிய நிறமாக மாறிய கதை.! பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்.!
Related Stories
Recommended image1
Zodiac Signs: மே 17 முதல் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு பணம் கொட்டப்போகுது.!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved