- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசிக்காரங்க சரளமா பொய் பேசுவாங்களாம்..! இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்!
Astrology: இந்த 5 ராசிக்காரங்க சரளமா பொய் பேசுவாங்களாம்..! இவங்ககிட்ட ரொம்ப உஷாரா இருக்கணும்!
ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் அதிக பொய் பேசும் நபர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Top 5 Zodiac signs best at lying
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் அதன் தனித்துவமான பண்புகள், பலங்கள் மற்றும் பலவீனங்கள் உள்ளன. சில ராசிக்காரர்கள் தங்கள் பேச்சுத் திறமை, புத்திசாலித்தனம் மற்றும் சூழ்நிலையை சமாளிக்கும் ஆற்றல் மூலம் எளிதாக பொய் பேசும் திறனைப் பெற்றுள்ளனர். இவர்கள் பொய்யை மிக இயல்பாகவும், நம்பகத்தன்மையுடனும் வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். இந்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் எளிதில் பொய் பேசும் திறனைக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
1.மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வார்த்தைகளை அழகாக பயன்படுத்தும் ஆற்றலுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் பேச்சுத் திறனுக்காக அறியப்படுபவர்கள். இவர்கள் புதனால் ஆளப்படுவதால் வாக்கு வன்மையும், விவேகமும் இயல்பாகவே இவர்களுக்கு உள்ளது. சிக்கலான சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புத்திசாலித்தனமான உரையாடல் மூலம் எளிதாக பொய்யை கூறி மற்றவர்களை நம்ப வைத்து விடுவார்கள். இவர்களின் பொய்கள் பெரும்பாலும் தீங்கு செய்யும் நோக்கம் அற்றவை. சூழ்நிலையை சமாளிக்க அல்லது மற்றவர்களை மகிழ்விக்கவே பொய் கூறுகின்றனர். உதாரணமாக ஒரு இடத்திற்கு தாமதமாக வந்தால் நகைச்சுவையான கதையை உருவாக்கி தங்களது தாமதத்தை மறைத்து விடுவார்கள்.
2.துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் அமைதியை விரும்புவார்கள். இவர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால் மற்றவர்களை மகிழ்விக்கும் விதமாக பேசுவதில் வல்லவர்கள். இவர்கள் பொய் பேசுவதற்கு முக்கிய காரணம் மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்பதற்காகவே. இவர்கள் சமநிலையை விரும்புவதால் மோதல்களை தவிர்க்கவே விரும்புகின்றனர். சில சமயங்களில் பிரச்சனையை தவிர்ப்பதற்காக உண்மையை மறைத்து இனிமையான பொய்யை கூறுவார்கள். உதாரணமாக ஒருவரின் உடை அழகாக இல்லை என்று தோன்றினாலும் துலாம் ராசிக்காரர்கள் அதை பாராட்டுவதற்காக ஒரு பொய்யை கூறி நண்பர்களின் மனதை உயர்த்துவார்கள். இவர்களின் பொய் பெரும்பாலும் நல்ல எண்ணத்திற்காகவே இருக்கும்.
3.விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மர்மமானவர்கள் மற்றும் தங்கள் உணர்வுகளை மறைப்பதில் வல்லவர்கள். இவர்கள் செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படுவதால் தங்கள் உண்மையான எண்ணங்களை வெளிப்படுத்தாமல் தேவைப்படும் பொழுது பொய்யை கூறுவதில் திறமைசாலிகள். இவர்கள் பெரும்பாலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கோ அல்லது தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மறைப்பதற்கோ பொய் கூறுகின்றனர். இவர்களின் பொய், மிகவும் துல்லியமாகவும், நம்பும் படியாகவும் இருக்கும். இதனால் இவர்களை மற்றவர்கள் சந்தேகப்பதே அரிது. ஒரு தனிப்பட்ட பிரச்சனையைப் பற்றி யாரேனும் இவர்களிடம் கேட்டால் மிக இயல்பாக ஒரு கதையை உருவாக்கி உண்மைகளை மறைத்து விடுவார்கள்.
4.தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். இவர்கள் குருவால் ஆளப்படுவதால் தங்கள் அனுபவங்களை பற்றி பேசும் பொழுது சற்று மிகைப்படுத்தி பொய் பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. தனுசு ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் கதைகள் மற்றும் அனுபவங்களை சுவாரஸ்யமாக கூறுவதற்காகவே பொய் கூறுகின்றனர். ஒரு சாதாரண நிகழ்வை கூட மிகவும் சுவாரஸ்யமான கதையாக மாற்றி மற்றவர்களை கவர்ந்திழுப்பார்கள். உதாரணமாக ஒரு சிறிய பயணத்தை பற்றி பேசும்பொழுது கூட அது ஒரு பெரிய சாகசமாக சித்தரித்து பேசுவார்கள்.
5.மீனம்
மீன ராசிக்காரர்கள் கற்பனை திறனுக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் கனவுலகில் வாழ்பவர்களாக கூறப்படுகிறது. இவர்கள் குரு மற்றும் நெப்டியூனால் ஆளப்படுவதால் உணர்ச்சி மற்றும் கற்பனை நிறைந்தவர்கள். இவர்கள் பொய் பேசுவது பெரும்பாலும் உண்மையை அழகு படுத்துவதற்காகவோ அல்லது மற்றவர்களை ஆறுதல் படுத்துவதற்காகவா தான் இருக்கும். இவர்களின் பொய்கள் மிகவும் உணர்ச்சிகரமாகவும், நம்பகத் தன்மையுடன் இருக்கும். இதனால் இவர்களை மற்றவர்கள் எளிதில் நம்பி விடுவார்கள். உதாரணமாக ஒரு நண்பர் தோல்வியில் மனமடைந்திருக்கும் பொழுது மீனராசிக்காரர்கள் உண்மையை விடவும் நம்பிக்கையை ஊட்டும் ஒரு கதையை கூறுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்ட ராசிக்காரர்கள் பொய் பேசுவதில் திறமைசாலிகளாக இருந்தாலும் இவர்களின் பொய்கள் பெரும்பாலும் தீங்கு செய்யும் நோக்கத்தில் இல்லை. இந்த ராசிக்காரர்கள் தங்களின் பேச்சுத்திறன், புத்திசாலித்தனம் மற்றும் கற்பனைத் திறன் மூலமாக பொய்யை இயல்பாகவும், நம்பகத் தன்மையுடனும் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய பண்பு அவர்களை சமூகத்தில் மகிழ்ச்சியாகவும், சமாளிக்கும் திறன் கொண்டவர்களாகவும் ஆக்குகிறது. இந்தக் கட்டுரையானது இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையிலானது மட்டுமே. இந்த நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)