- Home
- Astrology
- Astrology: குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! இத்தனை ராசிகளுக்கு மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கப்போகுது.!
Astrology: குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! இத்தனை ராசிகளுக்கு மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கப்போகுது.!
ஆகஸ்ட் 18, 2025 ஆம் தேதி சந்திரன் மிதுன ராசியில் நுழைய இருக்கிறார். அவர் அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குரு பகவானுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிகள் பலனடைய உள்ளன. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Gajkesari Rajyog on 18 august 2025
ஜோதிட சாஸ்திரங்களிலன்படி 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. அந்த வகையில் சந்திரன் தனது ராசியை வேகமாக மாற்றக்கூடிய கிரகமாக இருக்கிறார். அவர் ஒரு ராசியில் 2½ நாட்கள் வரை இருக்கிறார். அப்படி ராசியை மாற்றும் பொழுது அவர் பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி சந்திர பகவான் மிதுன ராசியில் நுழைகிறார். அங்கு ஏற்கனவே பயணித்து வரும் குருவுடன் இணைந்து அவர் கஜகேசரி யோகத்தை உருவாக்கியிருக்கிறார். கஜகேசரி யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கஜகேசரி ராஜயோகம் என்றால் என்ன?
கஜகேசரி ராஜயோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் மங்களகரமான யோகமாகும். இது குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு முக்கியமான கிரகங்கள் ஒன்று சேரும்பொழுது உருவாகிறது. கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். யானை மிகவும் பலம் வாய்ந்தது. அதைவிட சிங்கம் அதிக பலம் வாய்ந்தது. இந்த யோகத்தின் பெயர் யானை போன்ற பலம், சிங்கம் போன்ற ஆற்றல் மற்றும் ராஜ அதிகாரத்தை குறிக்கிறது. இந்த யோகம் உருவாவதற்கு குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்திருக்க வேண்டும். அல்லது ஒருவருக்கொருவர் கேந்திர ஸ்தானங்களில் (1,4,7,10) ஆகிய வீடுகளில் அமைந்திருக்க வேண்டும். இந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் உருவானால் அவர் வாழ்க்கையில் பெரும் செல்வம், புகழ், அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்தை பெறுவார் என்று நம்பப்படுகிறது.
ஒரே நாளில் உருவாகும் இரண்டு ராஜயோகங்கள்
ஆகஸ்ட் 18 2025 அன்று குருவும் சந்திரனும் மிதுன ராசியில் ஒன்றாக இணைகின்றனர். ஏற்கனவே ஆகஸ்ட் 18, 2025 அன்று குரு, சந்திரன், சுக்கிரன் (ஜூலை 26 முதல் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்) ஆகிய மூவரும் இணைந்து திரிகிரகி யோகத்தை உருவாக்கிய நிலையில், தற்போது குரு மற்றும் சந்திரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாகியுள்ளனர். இந்த யோகம் குறிப்பிட்ட ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும் என்று நம்பப்படுகிறது. குருவானவர் ஞானம், செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியை குறிக்கும் சுப கிரகமாக கருதப்படுகிறார். சந்திரன் மனம், உணர்ச்சிகள், செல்வம் மற்றும் பயணங்களைக் குறிக்கும் கிரகமாகும். இந்த இரண்டு சுப கிரகங்களின் சேர்க்கை குறிப்பாக மிதுன ராசியில் பல நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி ராஜ யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது. தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நேர்மறையான மாற்றங்கள் நடக்க உள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி மேம்படும். திடீர் நிதி நன்மைகள், நிதி வரவுகள் இருக்கும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். உடல்நலப் பிரச்சனைகள் தீர்ந்து ஆரோக்கியம் மேம்படும். ஏற்கனவே மிதுன ராசியில் திரிகிரகி யோகமும் உருவாகி இருப்பதால் அடுத்த சில நாட்களுக்கு இந்த இரண்டு யோகங்களும் மிதுன ராசிக்காரர்களுக்கு பலன்களை அள்ளி வழங்க உள்ளது.
துலாம்
துலாம் ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. பாக்கிய ஸ்தானம் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்ட இருக்கிறது. நீண்டகால உழைப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும். சொத்து, நிலம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, பணம் கைக்கு வந்து சேரலாம். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும் காலம் நெருங்கியுள்ளது. குடும்ப உறவுகள் வலுவடையும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வம் பெருகும். நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து சுமூகமான சூழல் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசியின் ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம், புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஆசைகள் நிறைவேறும் காலம் நெருங்கி உள்ளது. ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் மிகப்பெரிய இடத்தில் வேலை கிடைக்கலாம். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். இதன் காரணமாக மனமகிழ்ச்சி அதிகரிக்கும். முடிவு எடுக்கும் திறன் மேம்படும். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
பலனடையும் பிற ராசிகள்
இந்த ராஜயோகம் மேற்கூறிய மூன்று ராசிகளுக்கு மிகவும் சாதகமாக இருந்தாலும் மேஷம், கடகம், மகரம், ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கும் இந்த யோகத்தின் தாக்கம் நேர்மறையாக இருக்கும். நிதி முன்னேற்றம், தொழிலில் வெற்றி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கலாம். ஆன்மீக வளர்ச்சி, மன அமைதி, சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு, குரு பகவானுக்கு மஞ்சள் புஷ்பங்களால் அர்ச்சனை ஆகியவற்றை செய்யலாம். திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்வது சந்திர வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். தான தர்மங்கள் செய்வது, ஏழை எளியவர்களுக்கு உதவுதல், நேர்மையான சிந்தனைகளை வெளிப்படுத்துதல் ஆகியவை இந்த கஜகேசரி யோகத்தின் பலன்களை அதிகரிப்பதற்கு உதவும்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள கஜகேசரி ராஜ யோகத்தின் பலன்கள் பொதுவானவையே. இவை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம் மற்றும் அதில் உள்ள கிரக நிலைகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிய அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது)