- Home
- Astrology
- Astrology: கஞ்சத்தனம் இல்லீங்க.. புத்திசாலித்தனம்! சேமிப்பில் கில்லாடிகளாக விளங்கும் 4 ராசிகள்.! பணம் சேமிப்பதில் இவர்களை அடிச்சுக்க ஆளே இல்லை.!
Astrology: கஞ்சத்தனம் இல்லீங்க.. புத்திசாலித்தனம்! சேமிப்பில் கில்லாடிகளாக விளங்கும் 4 ராசிகள்.! பணம் சேமிப்பதில் இவர்களை அடிச்சுக்க ஆளே இல்லை.!
Zodiac Sign is Best at Saving Money: ஜோதிடத்தின்படி சில ராசியில் பிறந்தவர்கள் பணத்தை சேமிப்பதில் வல்லவர்களாக விளங்குவார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பணம் சேமிப்பதில் சிறந்த ராசிகள்
பணம் சம்பாதிப்பது ஒரு கலை என்றால் அதை சிக்கனமாக சேமிப்பது அதைவிட மிகப்பெரிய கலை. ஜோதிடத்தின்படி ஒருவருடைய ராசி மற்றும் அதன் அதிபதியான கிரகத்தின் தன்மையைப் பொறுத்து அவர்களின் பண மேலாண்மை அமைகிறது. அனைத்து ராசிகளுமே உழைக்க தெரிந்தவர்கள் என்றாலும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சில ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பதில் சிறந்து விளங்குவார்களாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தின் கீழ் வருபவர்கள். இவர்களுக்கு அழகான மற்றும் ஆடம்பர வாழ்க்கை மிகவும் பிடிக்கும். அதைவிட பாதுகாப்பான வாழ்க்கையை இவர்கள் விரும்புகிறார்கள். எதையும் நிதானமாக செய்வார்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் அது உண்மையிலேயே அவசியமானதா என்பதை பல முறை யோசிப்பார்கள். இவர்களிடம் எப்போதும் அவசர தேவைக்காக சிறிது பணம் இருந்து கொண்டே இருக்கும். கஷ்ட காலத்தில் யாரிடமும் கையேந்து கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் சேமிப்பு என்பது நீண்ட கால முதலீடாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதன் பகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள். புதன் பகவான் அறிவு மற்றும் கணக்கிற்கு அதிபதியாவார். எனவே கன்னி ராசியினர் சிறந்த கணக்காளர்களாக இருப்பார்கள். இவர்கள் வரவு மற்றும் செலவு கணக்கை முறையாக வைத்திருப்பார்கள். தேவையற்ற ஆடம்பரங்களை வெறுப்பார்கள். சிறு துளி பெருவெள்ளம் என்பதில் இவர்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு. மிகச்சிறிய தொகையாக இருந்தாலும் அதை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பார்கள். நிதி சார்ந்த பட்ஜெட்டை திட்டமிட்டு செய்வதில் இவர்களை மிஞ்சுவதற்கு ஆள் கிடையாது.
மகரம்
சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் பணத்தின் மதிப்பை மற்றவர்களை விட நன்றாக உணர்ந்திருப்பார்கள். இவர்கள் எப்போதும் பெரிய இலக்கை மையமாக வைத்து அதை நோக்கி பயணிப்பார்கள். சொந்த வீடு வாங்குவது, எதிர்கால பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காக தற்போதைய ஆசைகளை தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள். மிகவும் கட்டுக்கோப்பான இவர்கள் கையில் பணம் இருந்தால் அதை உடனே செலவு செய்ய மாட்டார்கள். இந்த குணத்தை கஞ்சத்தனம் என்று மற்றவர்கள் சொன்னாலும் அதை பொருட்டாக மதிக்காமல் சேமிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார்கள்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் ரகசியமானவர்கள். இவர்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது இவர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. இவர்கள் மிகவும் புத்திசாலிகள். பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்து இருக்க இவர்கள் விரும்புவதில்லை. எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை ரகசியமாக சேமித்து வைப்பது வல்லவர்களாக விளக்குகின்றனர். ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னால் அதன் தரம், ஆயுட்காலத்தை ஆராய்வார்கள். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக தரமற்ற பொருட்களை வாங்கி பணத்தை வீணடிக்க மாட்டார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

