- Home
- Astrology
- Weekly Rasi Palan: 2026-ன் முதல் அதிர்ஷ்ட வாரம்.! ஜனவரி முதல் வாரத்தின் டாப் 5 ராசிகள் இவை தான்.! கடன் தீரும், காசு பெருகும்.!
Weekly Rasi Palan: 2026-ன் முதல் அதிர்ஷ்ட வாரம்.! ஜனவரி முதல் வாரத்தின் டாப் 5 ராசிகள் இவை தான்.! கடன் தீரும், காசு பெருகும்.!
Weekly Rasi Palan Tamil: ஜனவரி 5, 2026 முதல் ஜனவரி 11, 2026 வரை கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றத்தால் ஐந்து ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வாராந்திர ராசி பலன் ஜனவரி 2026
ஜனவரி மாதத்திற்கான புதிய வாரம் ஜனவரி 5ஆம் தேதி பிறக்கிறது. இந்த வாரத்தில் குரு பகவான் மிதுனத்தில் இருக்கிறார். சந்திரன் கடகத்திலும், கேது சிம்மத்திலும், சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் தனுசு ராசியிலும், ராகு பகவான் கும்பத்திலும், சனி்பகவான் மீனத்திலும் உள்ளனர். இந்த கிரக நிலைகள் ஐந்து ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. உருவாகும் தன யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ஐந்து ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதியாக விளங்கி வரும் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் சூரியன், புதன், சுக்கிரனுடன் இணைந்து பயணித்து வருகிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியாக இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் லாபத்தை தரும். புதிய ஆற்றல் பிறக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் செயல்பாடுகள் உற்சாகத்தை தரும். இருப்பினும் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்பும் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். நிதி ரீதியாக நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் வெற்றியில் முடியும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் உங்களுக்கு லாபத்தைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உருவாகும் தன யோகம் பல பிரச்சனைகளை தீர்க்க வல்லது. வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக இருந்த சிக்கல்கள் இந்த வாரம் முடிவுக்கு வரும். குறிப்பாக வியாபாரிகள் தொழிலில் அதிக லாபத்தைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியால் பெருமை அடைவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்குவதற்கான சூழல் ஏற்படும். வேலையில் இருந்த தடைகள் விலகும். தொழில் ரீதியாக வெளிநாடு அல்லது வெளியூர் பயணங்கள் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் பட்ஜெட்டை மீறிய செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மருத்துவச் செலவுகள் அல்லது திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். எதிர்பாராத பண வரவு உங்களை மகிழ்விக்கும். தொழில்துறையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஐடி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய மற்றும் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு பெருகும். வணிகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு ஒப்பந்தங்கள் அல்லது மிகப் பெரிய ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

