- Home
- Astrology
- Nov 07 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும்.!
Nov 07 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும்.!
Today Rasi Palan : நவம்பர் 07, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 07, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இன்று உங்கள் உள்ளுணர்வு வழிகாட்டும். அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். மற்றவர்களின் கருத்துக்களால் குழப்பம் அடையாமல் உங்கள் சொந்த பாதையை நம்புங்கள். கூட்டு முயற்சிகள் மற்றும் புதிய ஒப்பந்தங்களின் போது கவனமாக செயல்படவும்.
நிதி நிலைமை:
நிதி திட்டங்களில் சீரான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். திடீர் பண ஆதாயங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். வணிகம் அல்லது அதிக ஆபத்து உள்ள முதலீடுகளை இன்று தவிர்க்கவும். பொறுமை மற்றும் ரகசியம் காப்பது நல்லது. தேவையற்ற அல்லது ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளில் புரிதலும், ஆதரவும் மனதிற்கு ஆறுதல் அளிக்கும். அன்பை பகிர்ந்து கொள்ள ஏற்ற நாளாகும். உணர்ச்சிபூர்வமான விஷயங்களில் பிடிவாதம் பிடிப்பது அல்லது விரைவான வெளிப்பாடுகளை தவிர்த்து பொறுமையாக நடந்து கொள்வது உறவுகளை பலப்படுத்தும். அமைதி காப்பதன் மூலம் குடும்பத்தின் நிலவும் சலசலப்புகளை தவிர்க்கலாம்.
பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமை என்பதால் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது. மகாலட்சுமி தாயாரை சிகப்பு நிற தாமரை மலர்கள் படைத்து வழிபடலாம். இது நிதி நிலைமையை மேம்படுத்தும். சிவப்பு நிற பூக்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்வது அதிர்ஷ்டத்தை கூட்டும். மாற்றுத் திறனாளிகள் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது நல்லது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.