- Home
- Astrology
- Nov 05 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்து எறிவீர்கள்.!
Nov 05 Today Rasi Palan: விருச்சிக ராசி நேயர்களே, இன்று எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்து எறிவீர்கள்.!
Today Rasi Palan : நவம்பர் 05, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 05, 2025 விருச்சிக ராசிக்கான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் தன்னம்பிக்கை உயரும். எந்த ஒரு செயலையும் தைரியமாக முன் நின்று செய்வீர்கள். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கான நல்ல பலன்களை இன்று எதிர்பார்க்கலாம். சிறிய தடைகள் வந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். புதிய முயற்சிகளை தொடங்க இது ஒரு நல்ல நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். இயந்திரங்கள் ஆயுதங்கள் அல்லது நெருப்பு சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. முதலீடுகள் அல்லது புதிய ஒப்பந்தங்களில் அவசரம் வேண்டாம். கவனமாக சிந்தித்து முடிவெடுக்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்கள் அல்லது கணவன் மனைவிக்குள் சிறு சலசலப்புகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தேவையற்ற வாக்குவாதங்கள் வேண்டாம். மனம் விட்டு பேசி முடிவெடுப்பது உறவுகளை பலப்படுத்தும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் செயல்பட விடுவது நல்லது. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
பரிகாரங்கள்:
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க முருகப்பெருமானை வழிபடுங்கள். செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற விருச்சிக ராசிக் காரர்கள் முருகப்பெருமானை வழிபடுவது சிறந்தது. சிகப்பு நிற தானியங்கள் அல்லது சிகப்பு நிறப் பொருட்களை தானம் செய்வது சிறந்தது. கோயிலின் வெளியில் உள்ள யாசகர்களுக்கு வஸ்திரதானம் அல்லது அன்னதானம் செய்வது நல்லது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.