- Home
- Astrology
- Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் நட்சத்திரக்குப் பெயர்ச்சியாகும் சூரியன்.! 4 ராசிகளுக்கு பணம் கூரையை பிச்சிட்டு கொட்டப் போகுது.!
Astrology: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் நட்சத்திரக்குப் பெயர்ச்சியாகும் சூரியன்.! 4 ராசிகளுக்கு பணம் கூரையை பிச்சிட்டு கொட்டப் போகுது.!
Sun transit 2025: நவம்பர் 19 ஆம் தேதி சூரிய பகவான் அனுஷ நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சனி பகவானின் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அனுஷ நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் சூரியன்
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. அது மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேத நாட்காட்டியின் படி சூரியன் நவம்பர் 19 ஆம் தேதி அனுஷ நட்சத்திரத்தில் நுழைந்து, டிசம்பர் 2்வரை அங்கேயே இருப்பார். அனுஷ நட்சத்திரம் சனி பகவானின் சொந்த நட்சத்திரமாகும். இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. மூன்று ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சூரியனின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். நிதி நிலைமை வலுப்பெறும். வேலையில் பதவி உயர்வு அல்லது பெரிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் முயற்சிக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கும். பொழுதுபோக்கு பயணம் மேற்கொள்ள நேரிடலாம். அதன் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் நல்ல முடிவுகளைத் தரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு சாதகமான நேரம் ஆகும். நிலம், வீடு தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையுடன் நீங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். பழைய பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். பண வரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். பணியிடத்தில் இருந்த வேலைப்பளு குறையும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கி, உங்கள் பணி அங்கீகரிக்கப்படும்.
மீனம்
சூரியனின் அனுஷ நட்சத்திர பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். உங்கள் தன்னம்பிக்கை உயரும். எந்த காரியத்தையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கோவில் தரிசனம், தியானம் போன்ற விஷயங்களில் மூலம் மன அமைதி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்களின் திறமைகள் பாராட்டப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும்.