- Home
- Astrology
- Astrology: ஐப்பசி மாத பௌர்ணமி 2025.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், இந்த 3 ராசிகளுக்கு துரதிருஷ்டம்.!
Astrology: ஐப்பசி மாத பௌர்ணமி 2025.! இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், இந்த 3 ராசிகளுக்கு துரதிருஷ்டம்.!
Aippasi Month Pournami 2025 Rasi Palangal: நவம்பர் 5, 2025 அன்று வரும் ஐப்பசி மாத பௌர்ணமி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஐப்பசி மாத பௌர்ணமி 2025
ஜோதிட ரீதியாக குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் பௌர்ணமி சக்தி வாய்ந்ததாகவும், முக்கியத்துவம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியானது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு ஐப்பசி பௌர்ணமி நவம்பர் 5 ஆம் தேதி வருகிறது. சந்திர பகவான் இந்த தினத்தில் ரிஷப ராசியில் இருப்பார். இந்த பௌர்ணமி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த பௌர்ணமி தினமானது சாதகமான பலன்களை கொடுக்கும். சந்திரன் உங்கள் ராசியில் இருப்பதால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கியமான பணிகள் முடிவுக்கு வரும். வேலை இடத்தில் சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண ரீதியான முன்னேற்றங்களை காண்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சமூக ஈடுபாடுகள் அதிகரிக்கும். உங்களின் மன மகிழ்ச்சியும், உற்சாகமும் பெருகும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். புதிய தொடர்புகள் மற்றும் நண்பர்கள் உருவாவார்கள். இது எதிர்கால வாய்ப்புக்கான வழிவகுக்கும். தனிப்பட்ட மற்றும் நிதி ரீதியான திருப்பு முனைகள் ஏற்படும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த பண உதவி அல்லது வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலில் புதிய வாய்ப்புகளுக்கான காலமும் நெருங்கி உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாத பௌர்ணமி சாதகமான காலத்தை ஏற்படுத்த உள்ளது. நீண்ட காலமாக உங்களை தடுத்து நிறுத்திய விஷயங்களில் இருந்து மீண்டு வருவதற்கு ஏற்ற காலமாக இருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புதிய உறவை தொடங்குவதற்கு சிறந்த காலமாக அமையும். தடைப்பட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய விஷயங்களை முயற்சி செய்வதற்கு இது ஏற்ற காலமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஐப்பசி பௌர்ணமியானது உறவுகளில் நன்மைகளை ஏற்படுத்தும். பிணைப்புகள் ஆழமடையும். தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில் அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் உருவாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பதால் ஒன்றாக முன்னேறுவதற்கான முயற்சி செய்வீர்கள். திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் சரியான துணையை தேடுவதற்கு வாய்ப்புகள் கூடி வரும்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்:
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பௌர்ணமி தினத்தில் மனக்குழப்பங்கள் சற்று அதிகமாக இருக்கும். குழப்பமான மனநிலை இருப்பதால் முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலைகளில் அதிக பரபரப்பு காணப்படும். எனவே நிதானமாக செயல்பட வேண்டியது அவசியம்.
கடகம்: உணர்ச்சி மற்றும் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வழக்கமான செயல்களில் இருந்து பின்வாங்க வேண்டிய சூழல்கள் ஏற்படலாம். அதிக உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். கனவுகளை நோக்கிய பயணத்தில் தடைகள் வரலாம். சுய சிந்தனை செய்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் வரலாம். அவர்களுடன் போதுமான நேரத்தை செலவழிக்க முடியாமல் போகலாம். எனவே பணியிடத்திலும், குடும்பத்திற்கும் இடையே சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)