பணமழை பொழியப்போகும் பிப்ரவரி! விருச்சிக ராசிக்கு ராஜயோகக் காலம்!
Viruchiga Rasi February Matha Rasi Palan 2026 in Tamil : விருச்சிக ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதில் விருச்சிக ராசியினரின் வாழ்க்கை, கல்வி, வேலை வாய்ப்பில் சாதகமான பலன் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

விருச்சிக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026
கிரக நிலைகளின் பெயர்ச்சிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ராசியினரும் பலன்களை அனுபவித்து வருகின்றனர். கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நிலையில் மேஷம் முதல் துலாம் ராசியினர் வரையில் பிப்ரவரி மாத ராசி பலன்களை ஏற்கனவே பார்த்துவிட்ட நிலையில், இப்போது விருச்சிக ராசியினருக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிக ராசி மாத பலன் 2026 தமிழ்
பிப்ரவரி மாத கிரக நிலைகளின் படி, குரு பகவான் மிதுன ராசியிலும், சந்திரன் கடக ராசியிலும், கேது சிம்ம ராசியிலும், மகர ராசியில் சூரியன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. மீன ராசியில் சனி பகவானும், கும்ப ராசியில் புதன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையும் உண்டு. இதனடிப்படையில் விருச்சிக ராசியினரின் பிப்ரவரி மாத ராசி பலன்களை பார்க்கையில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசி பிப்ரவரி மாத பொதுப்பலன்கள்
தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு சில விருச்சிக ராசியினருக்கு கை, முகம் தொடர்பாக பாதிப்பு ஏற்படலாம். கையில் வீக்கம் வந்து நீங்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
2026 பிப்ரவரி மாத ராசி பலன்கள்
அதே போன்று நேரம் தவிர்த்து சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். இந்த மாதம் முழுவதும் சீரான பலன் கிடைக்க விருச்சிக ராசியைச் சேர்ந்த அன்பர்கள் பரிகாரமாக செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வர எல்லா நன்மையும் உண்டாகும் என்பது ஐதீகம்.