Visha Yoga : ஆபத்தானதா விஷ யோகம்? எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு?
Visha Yoga : ஜோதிடத்தில் சனி மற்றும் சந்திரன் ஒரே ராசியில் இணைவதை 'விஷ யோகம்' என்பார்கள். தற்போது மீன ராசியில் சனிபகவான் இருக்கிறார். அவருடன் சந்திரனும் இணைவதால் விஷ யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் 4 ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
14

Image Credit : Chatgpt
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு, ஜாதகத்தின் 10-ம் வீட்டில் இந்த விஷ யோகம் உருவாகிறது. இதனால், உங்களுக்குப் பணிச்சுமையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால், பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடலாம். இந்த தாக்கம் சுமார் மூன்று நாட்கள் நீடிக்கும் என்பதால், அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
24
Image Credit : Pixabay
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த விஷ யோகத்தால் அடுத்த மூன்று நாட்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். உடல்நலப் பிரச்சினைகளும் வரலாம். ஆபத்தான முதலீடுகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் இருந்து விலகி இருப்பது அவசியம். இந்த நேரத்தில் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
34
Image Credit : Pixabay
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு 7-ம் வீட்டில் விஷ யோகம் உருவாகிறது. இதனால், திருமண வாழ்விலும், பார்ட்னர்ஷிப் தொழிலும் தவறான புரிதல்கள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத்துணையிடம் மிகவும் பொறுமையாகப் பேசுங்கள். ஈகோ காரணமாக சண்டைகள் வர வாய்ப்புள்ளது, எனவே கவனமாக இருங்கள்.
Macha Sastra : இந்த இடத்தில் மச்சம் இருந்தா நீங்க தொட்டதெல்லாம் வெற்றிதான்! மச்ச சாஸ்திர ரகசியம்!
44
Image Credit : Getty
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு விஷ யோகம் அடுத்த மூன்று நாட்களுக்குச் சிக்கல்களைக் கொடுக்கும். வீட்டில் பொறுப்புகள் கூடும், மன அமைதி குறையும். சொத்து, வாகனம் அல்லது வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை, இல்லையெனில் பிரச்சினைகள் வரலாம்.
Unlucky Zodiac Signs : நல்லது செஞ்சாலும் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் அந்த 3 ராசிகள்! ஏன் தெரியுமா?
Latest Videos

