- Home
- Astrology
- Sukra Thisai: ஜனவரியில் தொடங்கும் சுக்கிர திசை.! இந்த 5 ராசிகள் வீடு, கார், பங்களான்னு வசதியா வாழப்போறீங்க.!
Sukra Thisai: ஜனவரியில் தொடங்கும் சுக்கிர திசை.! இந்த 5 ராசிகள் வீடு, கார், பங்களான்னு வசதியா வாழப்போறீங்க.!
Sukra Peyarchi 2026 Palangal: 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிகழ இருக்கும் சுக்கிர பெயர்ச்சி ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜனவரி 2026 சுக்கிரனின் சஞ்சாரம் மற்றும் அதனால் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Sukra Peyarchi 2026 Palangal - சுக்கிர பெயர்ச்சி 2026
ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் செல்வம், ஆடம்பரம், திருமண வாழ்க்கை, அழகு, பொன், பொருள், வசதிகளின் காரகராவார். ஆண்டின் தொடக்கத்தில் தனுசு ராசியில் இருக்கும் அவர், ஜனவரி 13, 2026 அன்று மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மகர ராசியில் ஏற்கனவே இருக்கும் செவ்வாய் மற்றும் சூரியனுடன் சுக்கிரன் இணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகிறார். மேலும் ஜனவரி 17ல் புதனும் மகரத்தில் இணைவதால் மகர ராசியில் அபூர்வ கிரக சேர்க்கை நிகழ இருக்கிறது.
மிதுனம்
சுக்கிர பகவானின் மகர ராசி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பெரும் மாற்றத்தைத் தர இருக்கிறது. மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் வரவு மற்றும் வருமானத்தில் உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தடைபட்டு நின்ற சுப காரியங்கள் நடக்கும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகும்.
மகரம்
சுக்கிர பகவான் மகர ராசியின் லக்ன ஸ்தானத்தில் (முதல் வீட்டில்) சஞ்சரிக்க இருக்கிறார். எனவே இந்த காலகட்டம் மகர ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையும். சுக்கிர பகவானின் அருளால் வேலையில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வீடு, கார், வாகனம் போன்றவற்றை வாங்குவீர்கள். வீட்டை மராமத்து செய்தல், பழுது பார்த்தல் அல்லது புதிய வீடு கட்டுதல் போன்ற பணிகள் வேகமெடுக்கும். தடைபட்டு நின்ற சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அளவில்லாமல் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியை சுக்கிர பகவான் ஆள்கிறார். இவர் ரிஷப ராசிக்கு 9 இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். இது மிகுந்த நன்மைகளை தரவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் சாத்தியமாகும். மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் ஒருவித அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக நீங்கள் நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். தாய் வழி பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புக்களை சுமக்க நேரிடலாம். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அல்லது தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சுக்கிர பகவான் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக குழந்தை இல்லாமல் தவித்து வருபவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். காதல் உறவில் இருப்பவர்களுக்கு பெற்றோரின் சம்மதம் கிடைத்து திருமணம் கைகூடும். குழந்தைகளால் பெருமை சேரும். கலை மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு பெயரும், புகழும் கிடைக்கும். பங்குச் சந்தை அல்லது பிற முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

