Jan 02 Thulam Rasi Palan : ஜனவரி 02, 2026 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

ஜனவரி 02, 2026 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் முழுவதும் ஒரு வித பதற்றத்துடன் காணப்படுவீர்கள். எனவே நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம். நீங்கள் தொடங்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் வெற்றி கிட்டும். அலைச்சல்கள் கூடும் என்றாலும் அதன் மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

நிதி நிலைமை:

திடீர் மருத்துவச் செலவுகள் அல்லது தேவையற்ற பயணச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான நல்ல வழிகள் பிறக்கும். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சிறிய லாபங்கள் கூட மன நிறைவைத் தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

பரிகாரங்கள்:

பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வெல்லம் கலந்த உணவை வணங்குவது கர்ம வினைகளை குறைக்கும். ‘ஓம் நமசிவாய: மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். ஸ்ரீராகவேந்திர் வழிபாடு சிறந்தது. ராகு காலத்தில் துர்கையை வழிபடுவது மன அமைதியைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.