- Home
- Astrology
- Panchagrahi Yog: புத்தாண்டில் நடக்கும் அதிசயம்.! ஒரே ராசியில் அமரும் 5 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
Panchagrahi Yog: புத்தாண்டில் நடக்கும் அதிசயம்.! ஒரே ராசியில் அமரும் 5 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
Panchagrahi Yoga 2026: 2026 ஆம் ஆண்டில் வானில் ஒரு மிக அரிதான நிகழ்வு நடக்க உள்ளது. கும்ப ராசியில் 5 கிரகங்கள் ஒன்றாக இணைய உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Panchagrahi Yoga 2026 - பஞ்சகிரக யோகம் 2026
ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் 2026 பிப்ரவரி மாதத்தில் பிற்பகுதியில் கும்ப ராசியில் 5 கிரகங்கள் இணைகின்றன. சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகிய ஐந்து கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் நடைபெற இருக்கிறது.
பஞ்சகிரக யோகம் காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அளிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம்
இந்த ஐந்து கிரகங்களின் சேர்க்கை கும்ப ராசியில் நடைபெற இருக்கிறது. கும்ப ராசியின் ஒன்றாம் வீடான ஜென்ம ராசியிலேயே இந்த சேர்க்கை நிகழ்வதால் கும்ப ராசிக்காரர்கள் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை குழப்பத்தில் இருந்து வந்தவர்கள் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். புதிய சிந்தனைகள் உருவாகும். ராகுவும் சுக்கிரனும் இணைவதால் ஆடம்பரப. பொருட்கள் மற்றும் வசதிகள் பெருகும். வீட்டில் தங்கம் சேரும். புதிய வீட்டை வாங்குவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்கு மூன்றாம் வீடான வெற்றி ஸ்தானத்தில் கிரகங்கள் இணைய இருக்கின்றன. இதன் காரணமாக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு பெருகும். நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்களின் புத்தி கூர்மை அதிகரித்து, படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வணிகர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்கள், பணவரவுக்கான வாய்ப்புகளும் உண்டு.
மிதுனம்
மிதுன ராசிக்கு 9 ஆவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். தடைபட்ட சுப காரியங்கள் மீண்டும் கைகூடும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் கனவு நனவாகும். உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு சிறந்த முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் சரியாகி மனம் நிம்மதி அடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பஞ்சகிரக யோகம் 10-ம் வீடான கர்ம ஸ்தானத்தில் நடக்க இருக்கிறது் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். பணியிடத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சிறிதாக தொழில் நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். தொழில் விரிவாக்கத்திற்காக வங்கி கடனுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்திகள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்கு இந்த ஐந்து கிரகங்களும் 11 வது வீடான லாப ஸ்தானத்தில் இணைகின்றன. எனவே இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். தொழிலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஏற்படும். புதிய முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைத் தரும். உங்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

