MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 2026-ல் சனி பகவான் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வாரி வழங்கப் போகிறார்.! உங்க ராசி இருக்கா?

2026-ல் சனி பகவான் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வாரி வழங்கப் போகிறார்.! உங்க ராசி இருக்கா?

Sani Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் சனி பகவான் 4 ராசிகளுக்கு சுப பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்க இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 30 2025, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சனி பெயர்ச்சி 2026
Image Credit : Asianet News

சனி பெயர்ச்சி 2026

2026 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக எப்படி இருக்க போகிறது என்பதை அறிவதற்கு பலரும் ஆவலாக இருக்கின்றனர். குறிப்பாக சனி பகவானின் நிலை குறித்து தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு சனி பகவான் மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றும் அவர், 2026 முழுவதும் மீன ராசியிலேயே பயணிக்கிறார். இதன் காரணமாக புதிய ஆண்டில் சனி பகவானின் ஆசியை நான்கு ராசிக்காரர்கள் முழுமையாகப் பெற இருக்கின்றனர். அது குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : stockPhoto

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பது என்பது மிகப் பெரிய பண வரவைக் குறிக்கும். எனவே 2026 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக புதிய உயரத்தை பெறப்போகிறீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கு பணக்கஷ்டம் எதுவும் ஏற்படாது. தொழிலில் புதிய முதலீடுகளை செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். நிலுவையில் இருந்த பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாள் கனவான புது வீடு வாங்கும் யோகம் உருவாகும். சனி பகவான் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை இரட்டிப்பாக்கி தருவார்.

35
கன்னி
Image Credit : Pinterest

கன்னி

கன்னி ராசிக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். ஆறாம் வீடு சத்ரு, ரோக ஸ்தானம் ஆகும். பொதுவாக சனி பகவான் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமரும் பொழுது அது அந்த ராசியினருக்கு அசுர வளர்ச்சியைத் தரும் என்பது விதியாகும். ஆறாம் வீட்டில் சனி பகவான் அமர்வால் உங்கள் எதிரிகளை வீழ்த்தும் வல்லமையைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக உங்களை தொந்தரவு செய்து வந்த கடன் பிரச்சனைகள் நீங்கும். உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, மனநிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

45
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசியினர் 2026 ஆம் ஆண்டு ஏழரை சனி முழுமையாக முடிந்து விடுதலைப் பெற இருக்கிறீர்ரகள். சனி பகவான் 4ஆம் வீடான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக இத்தனை ஆண்டுகள் ஏழரை சனியால் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும். சனி பகவான் உங்களுக்கு சுப போகங்களை வழங்கத் தொடங்குவார். குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கி அமைதி நிலவும். திருமணம், வளைகாப்பு போன்ற தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். புதிய வாகனம், சொத்துக்கள் வாங்கும் யோகம் சிறப்பாக உள்ளது. சனி பகவானின் பரிபூரண ஆசி இருப்பதால் 2026 ஆம் ஆண்டு மகிழ்ச்சி கொடுக்கும் ஆண்டாக அமையும்.

55
கும்பம்
Image Credit : Pinterest

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அதிபதியாவார். 2026 இல் இவர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி நடக்கிறது. சனி பகவான் தனது சொந்த ராசியின் மீதான பார்வையை விலக்கிக் கொள்ளும் நேரத்தில் தான் கற்றுக் கொடுத்த பாடங்களுக்கு பரிசாக அதிர்ஷ்டத்தை வாரி வழங்க இருக்கிறார். எனவே 2026 ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும் ஆண்டாக இருக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். தொழிலில் இருந்த மந்த நிலைகள் நீங்கி புதிய கிளைகளை தொடங்கும் அளவிற்கு வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(9.2 ov)43/1
IND need 143 runs in 244 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
Rasi Palan 2026: திருவோணத்தில் நடக்கும் சூரிய பெயர்ச்சி.! 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கப்போகுது.!
Recommended image2
Rasi Palan 2026: ஜனவரியில் ராசியை மாற்றும் 5 கிரகங்கள்.! 2026 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved