சுக்கிர பெயர்ச்சி 2026: கடன் தொல்லை தீர போகுது.. கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!
Venus Transit 2026: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளதால் 4 ராசிக்காரர்கள் கடன் தொல்லை தீர்ந்து கோடீஸ்வர யோகம் பெறப்போகிறார்கள். அவை என்னென்ன ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

சுக்கிர பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் அழகு, செல்வம், காதல், ஆடம்பரம் மற்றும் செழிப்பின் அதிபதியாக சுக்கிர பகவான் திகழ்கிறார். அசுரர்களின் குருவாகக் கருதப்படும் சுக்கிரன், பொதுவாக ஒரு ராசியில் 30 நாட்கள் வரை சஞ்சரிப்பார். அதேபோல, குறிப்பிட்ட கால இடைவெளியில் தன் நட்சத்திரத்தையும் மாற்றக்கூடியவர்.
அந்த வகையில், வரும் செப்டம்பர் 11-ஆம் தேதி சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 24-ஆம் தேதி வரை சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன், அதன்பின் சித்திரை நட்சத்திரத்திற்கு மாறுவார். இந்த இடைப்பட்ட காலத்தில் சுக்கிரனின் நட்சத்திர மாற்றமானது 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், 4 ராசிக்காரர்களுக்கு யோக பலன்களையும், நிதி நிலையில் அபரிமிதமான வளர்ச்சியையும் தரவுள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனின் இந்த மாற்றம், உங்களுக்குப் பொற்காலமாக அமையவுள்ளது. நீண்ட நாட்களாக நீங்கள் போட்டு வந்த கடின உழைப்பிற்கு ஏற்ற முழு அங்கீகாரமும் பாராட்டும் இப்போது கிடைக்கும். நிலுவையில் இருந்த சிக்கலான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். தகுதியானவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்தும் பணவரவு அதிகரித்து, உங்களின் பொருளாதார நிலை கணிசமாக உயரும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி தொட்டதெல்லாம் துலங்கும் அமைப்பைத் தரும். எதிர்பாராத யோகத்தின் மூலம் அதிர்ஷ்டப் பணவரவும், முதலீடுகள் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும். புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். திருமண வயதில் உள்ள மிதுன ராசியினருக்குப் பொருத்தமான நல்ல வரன் அமையும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்குச் செல்வதால், உங்களின் ஆளுமையும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மன அழுத்தத்தைத் தந்து வந்த கடன் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடுவீர்கள். கலை, ஊடகம், ஃபேஷன் மற்றும் டிசைனிங் துறையில் உள்ளவர்களுக்குப் புகழும் புதிய வாய்ப்புகளும் குவியும். தொழில் செய்வோருக்கு லாபகரமான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் புரிதலும் கூடும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கக்கூடிய காலக்கட்டமாக இது இருக்கும். வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அல்லது முயற்சிகள் இப்போது கைக்கூடும். பணப் புழக்கம் அதிகரித்து நிதிநிலை வலுவடையும். வேலை பார்க்கும் இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் சொற்களுக்கு மதிப்புக் கூடும். சமுதாயத்திலும், சுற்றத்திலும் மரியாதை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

