மஞ்சள் முடிச்சை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க; பண பிரச்சினை தீரும்!
வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி அமைதி நிலவும். இப்போது நிதி ஆதாயத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து குறிப்புகளை பின்பற்றுங்கள்.

How To Use Turmeric To Attract Money : வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வர வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தவகையில் மஞ்சள் தொடர்பான சில விதிகள் வாஸ்து சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. மஞ்சள் என்பது சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும்.

மஞ்சள் :
வாஸ்துபடி மஞ்சள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது ஆரோக்கியம் மற்றும் சரும நிறத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் அதன் மருத்துவ குணங்களுக்காகவும் நன்கு அறியப்படுகிறது. இப்போது பணம் குவிய மஞ்சள் தொடர்பான சில வாஸ்து விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரதான வாயில்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் மஞ்சளை ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால் உங்கள் வீட்டின் நிதி நிலைமை விரைவில் முன்னேற்றமடையும். வாஸ்து படி, வீட்டின் பிரதான கதவு மிகவும் முக்கியமான இடம். எனவே இங்கே ஒரு மஞ்சள் கட்டியை வைப்பது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் இருக்கும். இந்து மதத்தில் மஞ்சள் மங்களகரமானதாக கருதப்படுவதால், வீட்டின் நுழைவாயிலில் மஞ்சள் கட்டியை தொங்கவிடுவதன் மூலம் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் எப்போது உங்கள் வீட்டில் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: கற்பூரத்தை எப்போதும் உங்கள் பாக்கெட்டில் வைங்க; பணத்திற்கு ஒருபோதும் தட்டுப்பாடு வராது!
பெட்டகத்தில் மஞ்சள் :
நீங்கள் பணம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால் மஞ்சள் உங்களது பிரச்சினையை தீர்க்க உதவும். வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்களது பண பெட்டகத்தில் ஒரு கட்டி மஞ்சளை வைப்பதால் நிதி ஆதாயம் மேம்படும்.
இதையும் படிங்க: Vastu Tips : பணத்தை எண்ணும் போது இந்த தவறை செய்யாதீங்க.. துரதிஷ்டம் வரும்!
பணப்பையில் மஞ்சள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது பாக்கெட் அல்லது பணப்பையில் மஞ்சள் கட்டியை வைப்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் உங்கள் மீது எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் மஞ்சள் உங்களது பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.