வாஸ்து: கிச்சனில் இந்த '4' பொருட்களை காலியாக வைக்காதீங்க; செல்வம் தாங்காது!
Vastu Tips For Kitchen : வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் சில பொருட்கள் காலியாக இருக்கக் கூடாது. இல்லையெனில் வீட்டில் செல்வம் குறையும்.

வாஸ்து: கிச்சனில் இந்த '4' பொருட்களை காலியாக வைக்காதீங்க; செல்வம் தாங்காது!
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் செல்வம் செழிப்பு குவிய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் தெரிந்தது தெரியாமலோ அவர்கள் செய்யும் சில தவறுகள் வீட்டில் வறுமையை கொண்டு வரும். எனவே ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை பின்பற்றினால் வீட்டில் பணப் பற்றக்குறை வரவே வராது. அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தில் சமையலறை முக்கிய பகுதியாக கருதப்படுகிறது. சமையலறை தொடர்பான சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றினால் பல நன்மைகளை பெறலாம். அந்த வகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் காலியாக வைக்க கூடாது. இல்லையெனில், வீட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
உப்பு:
உப்பு உணவின் சுவையை அதிகரிக்கும். ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிச்சனில் உப்பு காலியாக இருக்க கூடாது. இல்லையெனில், வாழ்க்கையில் துயரம் தான் ஏற்படும். மேலும் வீட்டில் எதிர்மறையான சக்தியை அதிகரிக்கும்.
அரிசி:
அரிசி தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வழிப்பாட்டிற்கு முக்கியமானது. எனவே, கிச்சனில் அரிசியை முழுவதுமாக காலியாக வைக்காதீர்கள். வாஸ்துபடி, அரிசி காலியாக இருந்தால் அது சுக்கிர கிரகத்தை பலவீனப்படுத்தும்.
இதையும் படிங்க: இன்றே இந்த பொருட்களை சமையலறையில் இருந்து தூக்கி எறியுங்கள்; இல்லையெனில் வறுமைக்கு ஆளாவீர்!
மாவு :
வாஸ்து படி, மாவு இருக்கும் பாத்திரம் ஒருபோதும் காலியாக இருக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, காலியாகத படி எப்போதுமே நிறைவாக வையுங்கள். மாவு முழுவதும் தீர்ந்துவிட்டால் அது வீட்டிற்கு அசுபமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: உங்க கிச்சன்ல 'எந்த' கலர் பெயிண்ட்? கண்டிப்பா 'செல்வம்' குவியும்!!
மஞ்சள்:
மஞ்சள் கிச்சனில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள். மேலும் மஞ்சளில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இது மத மற்றும் மங்களகரமான செயல்பாடுகளில் கருதப்படுகிறது. வாஸ்துபடி, கிச்சனில் மஞ்சள் தீர்ந்து போகக்கூடாது. அப்படி போனால், மகிழ்ச்சி மற்றும் அதிஷ்டம் குறையும். எனவே, மஞ்சளை எப்போதும் காலியாக வைக்க வேண்டாம்.