- Home
- Astrology
- Astrology Today November 1: நட்சத்திரங்களின் நகர்வு.! உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்.?! நல்ல செய்தி காத்திருக்கு.!
Astrology Today November 1: நட்சத்திரங்களின் நகர்வு.! உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்.?! நல்ல செய்தி காத்திருக்கு.!
இந்த ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய கணிப்புகளை வழங்குகிறது. நிதி, தொழில், குடும்ப வாழ்க்கை, மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளுடன், ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட எண் மற்றும் நிறமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷராசி நேயர்களே, குடும்பத்தில் மூத்தவர்களுடன் செலவிடும் நேரம் மன நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும். பணியில் ஈடுபாடு அதிகரிக்கும். இலக்கை நோக்கிய செயல் நிம்மதியை தரும். விற்பனை குறைவு காரணமாக நிதி சிரமம் இருந்தாலும், தன்னம்பிக்கை உங்களை முன்னேற்றும். திடீர் பயணம் உங்களுக்கு இனிய அனுபவங்களாக மாறும். சொத்து முயற்சிகள் அனைத்தும் நன்மை தரும். கல்வியில் மெதுவான முன்னேற்றம் காணப்படும். கவனமுடன் முயற்சித்தால் சாதனை படைக்கலாம். பொறுமையும் அமைதியும் நிம்மதி தரும். காதல் கவனமாக இருக்க வேண்டியது கட்டாயம். நேர்மையான உரையாடல் நம்பிக்கையை அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்று பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக கடன் கொடுக்கும்போது. ஆவணங்கள் சரியாக இருக்கட்டும். ஆரோக்கியம் நடுநிலையாக இருக்கும். வியாபாரத்திலும் அலுவலகத்திலும் விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு முன்னேறுவது நல்லது. குடும்ப விழா மகிழ்ச்சியும் நிம்மதியையும் தரும். சொத்து தொடர்பான ஒப்பந்தங்களில் கவனமாக இருங்கள். பிடித்தவர்களுடன் மேற்கொள்ளும் சாலைப் பயணம் மகிழ்ச்சியை தரும். துணைவரின் உணர்வுகளை புரிந்துகொள்வது உறவை வலுப்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: இளம் பிங்
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, பண வரவு அதிகமாக இருந்தாலும் செலவுகளில் கட்டுப்பாடு அவசியம். தம்பி, தங்கை உள்ளிட்ட இளையவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டி வரலாம். உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உதவும். வாடகை மற்றும் இதர சொத்து வருமானம் தாமதமாகலாம். சுற்றுலா மற்றும் பிக்னிக் சார்ந்த பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் தெளிவான உரையாடல் நம்பிக்கை உருவாக்கும். உறவில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: டார்க் கிரே
கடகம்
கடக ராசி நேயர்களே, இன்று பண முடிவுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிலவும் அன்பும் புரிதலும் மன அமைதியை தரும். தொழிலில் புதிய திறன்களை கற்றுக்கொள்வது எதிர்காலத்தை உறுதிப்படுத்தும். வீடு புதுப்பிப்பது மகிழ்ச்சி தரும். பயணத்தில் ஓய்வு எடுத்தால் களைப்பு குறையும். கல்வியில் உற்சாகம் அதிகரிக்கும். துணைவனுடன் உறுதுணையாக இருப்பது உறவை நிலைத்தாக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, வியாபாரத்தில் விற்பனை மந்தமாகலாம் பொறுமை அவசியம். மன நிலையும் உடல் நிலையும் சமநிலையில் வைத்திருப்பது அமைதியை தரும். நிதிநிலையில் மெதுவான முன்னேற்றம் காணப்படும். பெற்றோரின் மனநிலை கவனத்துடன் கையாளவும். அவர்களின் அறிவுரையை புறம் தள்ள வேண்டாம். தொழிலில் புதிய திறன்களை மேம்படுத்தவும். கல்வி நிதானமான முன்னேற்றம் காணப்படும். சுற்றுலா மற்றும் பயணத் திட்டங்களில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து அக்கறை காட்டுவது உறவை வலுப்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 17 அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உறவினர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி தரும். சில நேரங்களில் மன அழுத்தம் வந்தாலும் மீண்டும் உற்சாகம் திரும்பும். பணியில் புதுமையான நல்ல யோசனைகள் உருவாகும். குறைந்த செலவில் மேற்கொள்ளும் பயணம் சுவாரஸ்யமாக இருக்கும். முதலீடுகளில் நீண்டகால திட்டம் அவசியம். ஆபத்தான முதலீடுகளை தவிர்க்கவும். தம்பதிகள் இடையே இணக்கம் காணப்படும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் சூழல் ஏற்படும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: ஊதா
துலாம்
துலாம் ராசி நேயர்களே, ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. பணவரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். தொழில் மற்றும் பணியிடத்தில் சிறிய மாற்றங்கள் தேவைப்படும். உணவுவி் சக்கரையை குறைப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். வீட்டுப் புதுப்பிப்பில் கூடுதல் செலவு வரலாம். குடும்ப உரையாடல்களில் நேர்மை அவசியம். கணவன் மனைவி இடையே சந்தோஷமும் புரிதலும் ஏற்படும். சின்ன சின்ன மனக்கசப்புகள் காணாமல் போகும். சாரி கேட்டால் சந்தோஷம் இரட்டிப்பாகும். அதிர்ஷ்ட எண்: 11 அதிர்ஷ்ட நிறம்: மேஜெண்டா
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, தொழிலில் நீங்கள் காண்பிக்கும் ஒழுக்கம் வெற்றியை அதிகரிக்கும். மனநிலை சந்தோஷமாக இருக்கும். ஆடம்பர பொருட்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு மகிழ்ச்சியை தரலாம். புதிய இடங்களுக்கு மேற்கொள்ளும் பயணம் வாய்ப்புகளைத் தரும். சகோதர சகோதரிகள் மற்றும் பெற்றோருடன் ஏற்படும் உரையாடலில் புரிதல் உருவாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகள் இடையே ஏற்படும புரிதல் உற்சாகத்தை தரலாம். அதிர்ஷ்ட எண்: 22 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
தனுசு
தனுசு ராசி நேயர்களே, தொடர்ந்து மேற்கொள்ளம் உடற்பயிற்சி ஆரோக்கியத்தை காக்கும். கூட்டுத் திட்டங்கள் நிதி மற்றும் மேலாண்மையில் பலனளிக்கும். பணியில் நேர மேலாண்மை வெற்றியை பெற்று தரும். இளைய உறவினர் தொடர்பான விஷயங்களில் பொறுமை அவசியம். திடீரென மேற்கொள்ளும வணிக பயணம் பலனளிக்கும். சொத்துக்களை பராமரிப்பு அவசியம். கல்வியில் சவால்கள் இருந்தாலும் முயற்சி வெற்றி தரும். தம்பதிகள் இடையே வெளியாட்களால் குழப்பம் ஏறபடலாம் என்பதால் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: மரூன்
மகரம்
மகர ராசி நேயர்களே, இன்று கல்வியில் உற்சாகம் காணப்படும். அதிக ஆற்றல் பணிகளில் வெற்றியை தரும். குடும்பத்தில் பழைய மற்றும் மறந்துபோன விஷயம் குறித்து மீண்டும் பேசப்படலாம். தொழிலில் திட்டமிடல் அவசியம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இருசக்கர வாகனத்தில் மேற்கொள்ளப்படும் சாலைப் பயணம் மகிழ்ச்சியை தரும். உங்களின் சொத்து மதிப்பு உயரும். தம்பதிகள் மற்றும் காதவலர்கள் இடையே சுமூக உறவு இருக்கும். மனம்விட்டு பேசுவது புரிதலை மேலும் வலுப்படுத்தும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, முதல் சொத்து வாங்குவதில் பொறுமை தேவை. யோகா மன அமைதியை தரும். வழிகாட்டி ஒருவரின் ஆலோசனை தொழிலில் உதவும். வீட்டு செலவுகளில் நிதானம் காக்கவும். நெருங்கிய உறவினர்களுடன் ஏற்படும் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பயண திட்டங்கள் தொழில்நுட்ப உதவியால் எளிதாகும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புளது என்பாதால், ஒருவரை ஒருவர் கேள்வி கேட்பதை தவிர்க்கவும். புரிந்துகொண்டால் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 18 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளி
மீனம்
மீன ராசி நேயர்களே, பண விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணலாம். கடன் விவகாரங்கள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்களை சந்திக்கும் சூழல் ஏற்படும். இதனால் சந்தோஷம் பலமடங்கு அதிகரிக்கும். தொழிலில் மேற்கொள்ளப்படும் மாற்றம் குழப்பம் தரலாம். கண்டிப்பாக பொறுமை தேவை. முன்பே திட்டமிட்ட பயணங்கள் செலவுகளை குறைக்கும். சொத்து விவகாரங்களில் சாதகமான முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய சவால்கள் வளர்ச்சியை ஏற்படுத்தும். பழைய நினைவுகள் மனநிலையை பாதிக்கலாம். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறம்: குங்குமப்பூ