- Home
- Astrology
- Zodiac Sign: புதனால் மாறும் வாழ்க்கை.! இனி ராஜ வாழ்க்கை காத்திருக்கு! அடியோடு மாறும் 3 ராசிகள் வாழ்க்கை!
Zodiac Sign: புதனால் மாறும் வாழ்க்கை.! இனி ராஜ வாழ்க்கை காத்திருக்கு! அடியோடு மாறும் 3 ராசிகள் வாழ்க்கை!
குரு மற்றும் ராகு-கேதுவின் நகர்வால், புதன் பகவான் மூன்று ராசிகளுக்கு ராஜபோக வாழ்க்கையை வழங்கப் போகிறார். கார்த்திகை மாதம் முதல் இந்த ராசிக்காரர்கள் நிதி, தொழில், மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் முன்னேற்றங்களை அனுபவிப்பார்கள்.

அள்ளிக்கொடுக்கும் புதன் பகவான்
குரு மற்றும் ராகுகேது நகர்வு காரணமாக புதன் பகவான் சில ராசிகளுக்கு ராஜபோக வாழ்க்கையை தர போகிறார். இந்த ஜோதிட நிகழ்வு சில ராசிகளின் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் வகையில் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் கிரகம் அறிவு, நினைவாற்றல், பேச்சுத்திறன், வணிகம் மற்றும் நிதி வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக கருதப்படுகிறது. “இளவரசன்” என அழைக்கப்படும் இந்த கிரகம் தற்போது 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை முற்றிலும் மறுபடியும் எழுதப் போகிறான்.
ரிஷபம் - சொத்து வாங்கும் காலம் இதுதான்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு, புதனின் புதிய திசையை காட்ட போகிறான். தொட்டதெல்லாம் துலங்கும் நிலை கார்த்திகை மாதம் முதல் தொடங்க போகிறது. அதற்கான முன்னோட்டம் இப்போதே தொடங்கியுள்ளதால் தற்போதே மிகப் பெரிய பொருளாதார முன்னேற்றத்தைக் ரிஷப ராசியினர் பெறப்போகின்றனர். கடந்த மாதங்களில் நிதி குறைபாட்டை சந்தித்தவர்கள் இப்போது அதில் இருந்து முழுமையாக மீளும் நிலை ஏற்படும். வணிக துறையில் புதுமையான யோசனைகள் உருவாகி அது முழுையாக வெற்றியடையும். கல்வி, கணிதம், பேச்சு கலை, ஊடகம் போன்ற துறைகளில் புதிய சாதனைகள் நிகழலாம். அதேபோல் குடும்ப அமைதியும் உறவுகளில் இணக்கமும் உருவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். வீடு அல்லது நிலம் வாங்க ஆசை உள்ளவர்களுக்கு இது சிறந்த காலம் என சொல்லப்படுகிறது.
விருச்சிகம் - பதவி உயர்வும், பணவரவும் காத்திருக்கு
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு, புதன் கிரகத்தின் நேரடி தாக்கம் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களாக முடங்கியிருந்த திட்டங்கள் இப்போது புது வேகத்துடன் நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்கள் பேச்சில் தெளிவு, நம்பிக்கை மற்றும் வன்மை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். வெளிநாட்டு வாய்ப்புகள் பெருகும். வெளிநாட்டு மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். திடீர் பணவரவு, பதவி உயர்வு, வியாபாரத்தில் சேமிப்பு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும் காலம் இது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் புதனின் சஞ்சாரத்தால் ராஜ வாழ்க்கையின் வாசலில் நிற்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் இவர்களின் பேச்சாற்றல், அறிவாற்றல், முடிவெடுக்கும் திறன் என்பன அனைத்தும் மேம்படும். அரசியல், கல்வி, மற்றும் அறிவியல் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும். பண வரவு பெருகி, புதிய நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தோன்றுவர். மன அமைதி மற்றும் ஆன்மிக வளர்ச்சி இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கும். சந்தோஷமும் நிம்மதியும் எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும்.
இனி வாழ்க்கையில் வெற்றி, செல்வம், பிரகாசம்
குரு, ராகு மற்றும் கேது நகர்வால் புதன் பகவானில் பார்வை கார்த்திகை மாதத்தில் திரும்புகிறது. இதனால் ஜோதிட ரீதியாக மிகப் பெரிய நல்ல மாற்றம் நிகழும் . சிலருக்கு அறிவு, பேச்சு, மற்றும் நிதி துறைகளில் புதன் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவதால், ரிஷபம், விருச்சிகம், தனுசு இந்த மூன்று ராசிகள் “ராஜ வாழ்க்கை” அனுபவிக்கப் போவதாக குறிப்பிடப்படுகிறது. புது வருடம் தொடங்கவுள்ள நிலையில் இந்த ஜோதிட நிகழ்வு அவர்கள் வாழ்க்கையில் வெற்றி, செல்வம், பிரகாசம் எனும் தங்க வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது.