- Home
- Astrology
- Tirupati Temple: திருப்பதிக்கு போறீங்களா? கியூல நிக்கிறதுக்கு நடுவுல இந்த முக்கிய இந்த 4 இடங்களை பார்க்க மறந்துடாதீங்க!
Tirupati Temple: திருப்பதிக்கு போறீங்களா? கியூல நிக்கிறதுக்கு நடுவுல இந்த முக்கிய இந்த 4 இடங்களை பார்க்க மறந்துடாதீங்க!
Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், கூட்ட நெரிசலால் மூலவரை தரிசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், கோவிலுக்குள் இருக்கும் முக்கிய இடங்களை பலரும் பார்ப்பதில்லை.

திருப்பதி ஏழுமலையான் கோவில்
உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில். இக்கோவிலுக்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் தினமும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். ஏழுமலையானை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட சுமார் 18 மணிநேரம் ஆகிவிடும்.
பக்தர்களுக்கு உணவு
இதனால் பக்தர்களுக்கு பசியை போக்கும் வகையில் உணவு, தண்ணீர் உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தானம் சார்பில் செய்து தரப்படுகிறது. ஆனால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பல இருந்தும் அதை பார்க்காமல் கேட்டை எப்போது திறப்பார்கள். எப்போது ஏழுமலையானை தரிப்பது என பக்தர்கள் இருப்பார்கள்.
திருப்பதி கோவிலில் கடப்பாரை
ஆனால் உண்மையாகவே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய விஷங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நுழையும் முன் பெரிய கடப்பாரை இருக்கும். அந்த கடப்பாரையை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதேபோல் உள்ளே வரும் போது மண்டபத்தில் தனிகை நடக்கும் இடத்தில் ஒரு பெருமாள் இருப்பார்.
வராகமூர்த்தி
அப்படியே சுற்றி வந்ததால் விமானத்தின் மேலே சீனிவாச பெருமாள் இருப்பார். கண்டிப்பாக சீனிவாச பெருமாளை பார்க்க வேண்டும். அப்படி வெளியே வரும் போது வராகமூர்த்தி இருப்பார். அந்த திருப்பதி மலையே வராகமூர்த்திக்கு தான் சொந்தம். வராகமூர்த்தி சன்னதி குளத்திற்கு அருகே உள்ளது.

