MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Solar Eclipse : சூரிய கிரகணத்தால் 90 நாட்களுக்கு நான் ஸ்டாப் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள் என்னென்ன?

Solar Eclipse : சூரிய கிரகணத்தால் 90 நாட்களுக்கு நான் ஸ்டாப் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள் என்னென்ன?

Solar Eclipse 2026 : 2026-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12 அன்று நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணம் சில ராசிகளுக்கு மிகவும் சுபமானதாக இருக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பதை பர்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Aug 11 2026, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Solar Eclipse 2026
Image Credit : AI Image

Solar Eclipse 2026

2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பீம அமாவாசை நாளில் நிகழவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த கிரகணம் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த கிரகணத்தை காண முடியாது என்பதால், இங்கு கிரகணத்துக்கான சூதக காலம் பொருந்தாது என்று கூறப்படுகிறது.

என்றாலும், ஜோதிட நம்பிக்கைகளின்படி கிரகணத்தின் தாக்கம் அது தெரியும் இடங்களுக்கு மட்டும் கட்டுப்படுவதில்லை. கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தனிநபர்களின் வாழ்க்கை மட்டுமின்றி, இயற்கை, பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில் சார்ந்த சூழல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளிலும் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கிரகணத்துக்குப் பிறகு சுமார் 90 நாட்கள் சில ராசியினருக்கு புதிய வாய்ப்புகள், நிதி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பு போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கலாம். அந்த வகையில், இந்த சூரிய கிரகணத்தால் அதிகம் பலன் பெறக்கூடிய 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Aadi Amavasai 2026: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆடி அமாவாசை.! மறக்காமல் செய்ய வேண்டிய வழிபாடுகள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : AI Image

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த சூரிய கிரகணம் மூன்றாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அடுத்த சில மாதங்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகலாம்.

பணியில் இருப்பவர்கள் தங்களின் திறமை மற்றும் உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கலாம். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள், திட்டங்கள் மற்றும் தொழில் தொடர்புகள் மூலம் முன்னேற்றம் கிடைக்கலாம்.

குடும்ப வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக நீண்ட நாட்களாக இருந்து வந்த சில உறவுச் சிக்கல்கள் படிப்படியாக குறையலாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

நிதி ரீதியாகவும் இந்த காலகட்டம் சாதகமாக அமையலாம். வருமானம் அதிகரிப்பதுடன், சேமிப்பை உருவாக்க புதிய வழிகள் கிடைக்கலாம். வீடு அல்லது சொத்து தொடர்பான முயற்சிகளிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
zodiac signs : அன்பை சரியாக வெளிப்படுத்த தெரியாத ராசிக்காரர்கள் இவங்க தானாம்
Related image2
zodiac signs : சோதனைகளை சாதனையாக மாற்றும் வல்லமை படைத்த ராசிகள்
36
மீனம்
Image Credit : AI Image

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் லாபம் மற்றும் ஆசைகள் நிறைவேறும் பதினொன்றாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த சில விஷயங்கள் கைகூடும் வாய்ப்பு உள்ளது.

பணியிடத்தில் உங்களின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம். உயர் அதிகாரிகள் மற்றும் நண்பர்களின் ஆதரவு முக்கியமான நேரத்தில் கிடைப்பதால் தொழில் இலக்குகளை அடைய எளிதாக இருக்கலாம்.

நீண்ட காலமாக வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால், அதற்கான வாய்ப்பு உருவாகலாம். நிலுவையில் இருந்த வேலைகள் மீண்டும் வேகம் பெறும். பணவரவு சீராகி, நிதி நிலைமை மேம்படக்கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவுகளுக்குள் இருந்த சிறிய கருத்து வேறுபாடுகள் குறைந்து, ஒருவருக்கொருவர் புரிதல் அதிகரிக்கலாம்.

46
கும்பம்
Image Credit : AI Image

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த சூரிய கிரகணம் ஒன்பதாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த வீடு அதிர்ஷ்டம், ஆன்மிகம், உயர்கல்வி, நீண்ட தூரப் பயணம் மற்றும் முக்கிய வாய்ப்புகளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.

எனவே, கிரகணத்துக்குப் பிறகு வரும் 90 நாட்கள் கும்ப ராசியினருக்கு முக்கியமான காலமாக இருக்கலாம். பணியில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது எதிர்பாராத வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வேறு நிறுவனங்களிலிருந்து நல்ல சலுகைகள் தேடி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

வியாபாரம் செய்பவர்கள் புதிய சந்தைகள் மற்றும் புதிய நபர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகள் மூலம் வளர்ச்சியைப் பெறலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.

நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுடன், நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் மீண்டும் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. குடும்பத்தின் ஆதரவு கிடைப்பதால் முக்கிய முடிவுகளை நம்பிக்கையுடன் எடுக்க முடியும். திருமண வாழ்க்கையிலும் நல்லிணக்கம் அதிகரிக்கலாம்.

56
விருச்சிகம்
Image Credit : AI Image

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கும் இந்த சூரிய கிரகணம் ஒன்பதாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கக்கூடிய காலகட்டமாக அடுத்த மூன்று மாதங்கள் அமையலாம்.

தொழில் ரீதியாக எதிர்பாராத வாய்ப்புகள் கதவைத் தட்டலாம். வேறு நிறுவனங்களிலிருந்து வேலை தொடர்பான சலுகைகள் வரலாம். தொழில் செய்பவர்களுக்கு புதிய தொடர்புகள் மற்றும் வியாபார விரிவாக்க முயற்சிகள் நல்ல பலனைத் தரக்கூடும்.

நிதி நிலைமை வலுப்பெறும். நீண்ட நாட்களாக பெற முடியாமல் இருந்த தொகைகள் கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் பணம் தொடர்பான நெருக்கடிகள் குறையலாம்.

குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதால் மனதில் இருந்த பல குழப்பங்கள் விலகலாம். கணவன்-மனைவிக்குள் நல்ல புரிதல் உருவாகி, திருமண வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு மற்றும் செல்வாக்கும் உயரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

66
கன்னி
Image Credit : AI Image

கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த சூரிய கிரகணம் பதினொன்றாம் வீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இது லாபம், வருமானம் மற்றும் ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய வீடாகும்.

இதனால் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இலக்குகளை நோக்கி முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் உங்கள் திறமை கவனிக்கப்பட்டு, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம். நண்பர்கள் மற்றும் தொழில் தொடர்புகள் மூலமாகவும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

வீடு அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகள் சாதகமாக நகரலாம். தடைப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கி வேகமாக முடிவடைய வாய்ப்பு உள்ளது.

பணவரவு அதிகரிப்பதுடன், நிதி நிலையும் வலுப்பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகி, உறவுகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Aadi Amavasai 2026: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆடி அமாவாசை.! மறக்காமல் செய்ய வேண்டிய வழிபாடுகள்
Recommended image2
Astrological Secrets: குழந்தையின் பெயர் தான் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றுமா? ஜோதிடம் சொல்லும் ரகசியம்!
Recommended image3
Astrology: வெளியே பார்த்தா கோபக்காரங்க.. ஆனா பழகுனா தங்கம்! அன்புக்காக உயிரையே கொடுக்கும் 4 ராசிகள்!
Related Stories
Recommended image1
zodiac signs : அன்பை சரியாக வெளிப்படுத்த தெரியாத ராசிக்காரர்கள் இவங்க தானாம்
Recommended image2
zodiac signs : சோதனைகளை சாதனையாக மாற்றும் வல்லமை படைத்த ராசிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved