- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
Happy Father Day: ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிகளைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாக விளங்குகிறார்கள். அந்த 4 ராசிக்காரர்கள் தங்கள் பிள்ளைகள் மீது அதிக பாசம், பொறுமையுடன் அவர்களை சிறந்த முறையில் வளர்ப்பதாக கூறப்படுகிறது.

அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிக்காரர்களும் தங்களது பிள்ளைகளை வெவ்வேறு விதமாக வழிநடத்தினாலும், குறிப்பிட்ட 4 ராசிகளைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் குழந்தைகளுக்கு 'பெஸ்ட் அப்பா'வாக (Best Father) திகழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பிள்ளைகள் மீது எல்லையற்ற அன்பு செலுத்துவதுடன், அவர்களின் பாதுகாப்பு, ஒழுக்கம் மற்றும் வெற்றிக்கான வழிகாட்டியாகத் திகழும் அந்த 4 அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். குழந்தை வளர்ப்பிற்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் 'பொறுமை' இந்த ராசித் தந்தையரிடம் இயல்பாகவே இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குச் சரியான ஆலோசனைகளை வழங்கி, அவர்களை நல்வழியில் நடத்துவதில் வல்லவர்கள். இதனால், இந்த ராசித் தந்தையர் மீது பிள்ளைகளுக்கு எப்போதும் தனிப்பாசமும், எல்லையற்ற நம்பிக்கையும் இருக்கும். பிள்ளைகள் தவறு செய்தாலும் தேவையில்லாமல் கோபப்படாமல், அவர்களுக்குப் புரியும்படி பொறுமையாக எடுத்து கூறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் அதிபதி மனோகாரகனான சந்திரன் ஆவார். இதனால் இவர்கள் மிகுந்த உணர்வுப்பூர்வமானவர்களாகவும், பாசக்காரர்களாகவும் இருப்பார்கள். பிள்ளைகளுடன் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் கோபப்பட்டாலும், அடுத்த கணமே அதைவிட இருமடங்கு அன்பையும் அக்கறையையும் காட்டி பிள்ளைகளை அரவணைத்துக் கொள்வார்கள். குடும்பத்தோடு நேரம் செலவழிப்பதையே இவர்கள் அதிகம் விரும்புவார்கள். தன் பிள்ளைகள் வாயைத் திறந்து கேட்பதற்கு முன்பாகவே அவர்களின் தேவைகளையும், மன ஓட்டத்தையும் புரிந்துகொண்டு அதை நிறைவேற்றுவார்கள்.
மகரம்
மகர ராசியின் அதிபதி கர்மகாரகனான சனி பகவான் ஆவார். இவர்கள் மிகவும் பொறுப்பானவர்களாகவும், எதார்த்தமாகச் சிந்திப்பவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், அதையே தன் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பார்கள். கடின உழைப்பு, போராட்டம் மற்றும் சொந்த அனுபவங்கள் மூலம் பிள்ளைகள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ள ஊக்குவிப்பார்கள். சில நேரங்களில் இவர்கள் கண்டிப்பான அப்பாவாகத் தெரிந்தாலும், மனதில் பிள்ளைகள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள். தன் பிள்ளைகளைத் சுயசார்பு உடையவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்க வெற்றியாளர்களாகவும் வளர்க்கும் இவர்கள்தான் பிள்ளைகளின் உண்மையான 'ரோல் மாடல்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி கிரகங்களின் ராஜாவான சூரியன் ஆவார். இந்த ராசியைச் சேர்ந்த தந்தையர்கள் தன் பிள்ளைகளின் திறமைகளைத் தட்டியெழுப்பி, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் சிறந்தவர்கள். பிள்ளைகளுடன் ஒரு நண்பனைப் போலப் பழகுவார்கள். இதனால் பிள்ளைகள் பயமின்றித் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை இவர்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்வார்கள். தன் பிள்ளைகள் சமுதாயத்தில் தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பிள்ளைகளுக்கு ஒரு வலுவான 'பாதுகாப்பு கேடயமாக' இந்த அப்பாக்கள்தான் முன்நிற்பார்கள்.

