- Home
- Astrology
- தை மாத ராசி பலன் 2026: கன்னி ராசிக்கு அள்ளிக்கொடுக்கப்போகும் சுப கிரகங்கள்.! நடக்கப்போகும் அற்புதம்.!
தை மாத ராசி பலன் 2026: கன்னி ராசிக்கு அள்ளிக்கொடுக்கப்போகும் சுப கிரகங்கள்.! நடக்கப்போகும் அற்புதம்.!
Thai Matha Rasi Palan 2026: ஜனவரி 15, 2026 அன்று மங்களகரமான தை மாதம் பிறக்க இருக்கிறது. தை மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
Thai Matha Rasi Palan 2026 Kanni: கன்னி ராசிக்காரர்களுக்கு தை மாதம் ‘முயற்சிகள் கைகூடும்’ மாதமாக அமையப் போகிறது. மாதத்தின் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் பகவான் தனாதிபதி சுக்கிரனோடு இணைந்து ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது பொருளாதார நிறைவை ஏற்படுத்தும். எடுக்கும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பத்தாமிடத்தில் குரு இருப்பதால் பணியில் புதிய பொறுப்புக்கள் வந்து சேரும். பதவி மாற்றம் ஏற்படும். வீண் பழியில் இருந்து விடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும். ஏழாம் இடத்தில் சனியின் பார்வை சில விஷயங்களை கவனமாக இருக்க அறிவுறுத்துகிறது.
குரு சஞ்சார பலன்கள்:
மிதுன ராசியில் வக்ர இயக்கத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான், கன்னி ராசியின் நான்கு மற்றும் ஏழாம் வீடுகளுக்கு அதிபதியாவார். குரு பகவான் வக்ரம் பெறுவது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரவுள்ளது. இனிய பலன்கள் கிடைக்கும். குறிப்பாக இடம், பூமி, நிலம் வாங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். கடன் சுமைகள் குறையும். கைவிட்டுப் போன வரன்கள் மீண்டும் முடிவாகும். கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்துவீர்கள்.
குருவின் பார்வை 2, 4,6 ஆகிய இடங்களில் விழுவதால், அந்த மூன்று இடங்களுக்குரிய பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரத்தொடங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடகை கட்டிடத்தில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். தாயின் உடல் நலனில் இருந்த பிரச்சனைகள் சீராகும். பணியிடத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையை அங்கீகரிப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பழைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
புதன் சஞ்சார பலன்கள்:
புதன் பகவான் கன்னி ராசியின் ராசிநாதனாகவும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குகிறார். ‘மறைந்த புதனால் நிறைந்த தன லாபம்’ என்பார்கள். அதன்படி ஆறாம் இடத்தில் புதன் பகவான் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அகலும். பண பற்றாக்குறை விலகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக வெளிநாடு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். திட்டமிட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு கடன்களை அடைக்க புதிய வழிகள் பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம் உறுதியாகும்.
சுக்கிரன் சஞ்சார பலன்கள்:
மகர ராசியில் சஞ்சரித்து வரும் சுக்கிர பகவான் பிப்ரவரி 7ஆம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிர பகவான் கன்னி ராசியின் இரண்டு மற்றும் ஒன்பது ஆகிய வீடுகளின் அதிபதியாவார். அவரது பெயர்ச்சி குடும்ப உறவுகளில் முன்னேற்றத்தைத் தரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பழுதாகி செலவு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும்.
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். போட்டி பொறாமைகள் அதிகமாக இருந்தாலும் தொழில் மற்றும் வியாபாரம் வெற்றி நடை போடும். மாதத்தின் முற்பகுதி வியாபாரிகளுக்கு லாபத்தை அள்ளித்தரும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரலாம். மாணவ மாணவிகள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டியதாக இருக்கும். உறவினருடன் பகை உருவாக வாய்ப்பு இருப்பதால் கவனத்துடன் செயல்படுங்கள்.
பரிகாரங்கள்:
புதன்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்வது தடைகளை நீக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். நரசிம்மருக்கு பானகம் நைவேத்யம் செய்து வழிபடலாம். இயலாதவர்கள் ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

