- Home
- Astrology
- மகர ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப்போகிறாள்.!
மகர ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டப்போகிறாள்.!
Shukraditya Rajyog 2026: ஜனவரி 2026 சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் தனுசு ராசியில் இருந்து வெளியேறி மகர ராசியில் ஒன்றாக இணைகின்றனர். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்ராதித்ய ராஜயோகம் 2026
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் சூரியனும், சுக்கிரனும் தனுசு ராசியில் இணைந்திருப்பார்கள். பின்னர் ஜனவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் சூரியன் மகர ராசிக்கு இடம் பெய்கிறார். அதே சமயம் சுக்கிரனும் மகர ராசிக்கு பெயர்ச்சிவதால் மகர ராசியில் சூரியன்-சுக்கிரன் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இது சுக்ராதித்ய யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகத்தால் அதிக நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
மேஷ ராசியின் 10ஆம் வீட்டில் இந்த சேர்க்கை நடைபெற இருப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். தந்தையிடமிருந்து சொத்துக்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மூதாதையர் அல்லது பரம்பரை சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த காலகட்டத்தில் முடிவடையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டில் சுக்கிராதித்ய ராஜயோகம் உருவாகிறது. இந்த வீடு களத்திர ஸ்தானம் எனப்படும். தொழில் கூட்டாண்மைகள், கணவன் மனைவி உறவு ஆகிய இடங்களை குறிக்கும் வீடாகும். எனவே இந்த காலகட்டத்தில் கூட்டுத் தொழில் மற்றும் உறவுகளில் மேன்மை கிடைக்கும். தடைபட்டு நின்ற திருமண காரியங்கள் கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இதன் காரணமாக லாபம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணையும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியை சூரிய பகவான் ஆள்கிறார். எனவே ராசிநாதன் சூரியன் உருவாக்கும் சுக்ராத்ய ராஜயோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். கலை மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு பணமும் புகழும் சேரும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குழந்தைகள் உங்களுக்கு பெருமை தேடி தருவார்கள். குழந்தைகளின் முன்னேற்றம் மன மகிழ்ச்சியைத் தரும். எதிர்பாராத பண வரவு, சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் அதிகம். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிரன் உங்களுக்கு சொத்துக்கள், பொன், பொருள், ஆபரணங்களை சேர்க்கும் வாய்ப்புகளை வழங்குவார்.
கன்னி
கன்னி ராசியின் நான்காம் வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. நான்காம் மீது சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே சுக்ராதித்ய யோகத்தால் நீங்கள் சொத்து சுகங்களை அனுபவிக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க முடியும். தாயார் வழியில் சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். திருமண வாழ்க்கையில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சுப பலன்களை அளிக்கும். அதிக தன்னம்பிக்கோடும் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சிலும், தோற்றத்திலும் புதிய வசீகரம் ஏற்படும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை நடைபெறும். அரசு பணிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நேர்காணலுக்கான அனுப்பு வரலாம். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் வேலைக்கான அழைப்புக் கடிதம் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

