- Home
- Astrology
- Astrology: துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! கோடீஸ்வர அம்சம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்.!
Astrology: துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்.! கோடீஸ்வர அம்சம் பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்.!
Shukra Aditya rajyog lucky zodiac signs: நவம்பர் 2, 2025 துலாம் ராசியில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம் காரணமாக சில ராசிகள் பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுக்ராதித்ய ராஜயோகம் 2025
சுக்ராதித்ய ராஜயோகம் என்பது சூரியன் மற்றும் சுக்கிரன் 2 கிரகங்களும் ஒரே ராசியில் இணையும் பொழுது உருவாகும் சுபமான யோகமாகும். சூரியன் தன்னம்பிக்கை, கவுரவம், ஆற்றல், தலைமைப் பண்பு ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் காதல், செல்வம், ஆடம்பரம், செழிப்பு, திருமண வாழ்க்கை மற்றும் கலைகளை குறிக்கும் கிரகமாகவும் அறியப்படுகின்றனர்.
துலாம் ராசி என்பது சூரிய பகவானுக்கு பலவீனமான ராசியாகும். இந்த ராசியில் சூரியன் குறைவான பலன்களையே வெளிப்படுத்துவார். இந்த நிலையில் நவம்பர் 2, 2025 சுக்கிரனும் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். இந்த எதிரெதிர் கிரகங்களின் விளைவு அவ்வளவு சுபமானதாக கருதப்படவில்லை.
இருப்பினும் இந்த இரு கிரகங்கள் இணையும் பொழுது உருவாகும் சுக்ராதித்ய யோகம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்களை தரவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
- சுக்ராதித்ய ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் நடக்க இருக்கிறது. இரண்டாம் வீடு செல்வம், தனம் மற்றும் பேச்சை குறிக்கும் வீடாகும்.
- எனவே கன்னி ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் திடீர் பண ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
- பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
- முதலீடுகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.
- திருமணமாகாதவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வலுவான பிணைப்புடனும் இருக்கும்.
- வேலையில் இருப்பவர்கள் அங்கீகாரத்தையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
தனுசு
- சுக்ராதித்ய ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் 11-வது வீட்டில் உருவாக இருக்கிறது. 11-வது வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
- எனவே இந்த காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாரத லாபத்தைப் பெறுவீர்கள். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும்.
- வணிகத்தில் மகத்தான வெற்றியையும் நல்ல ஆதாயங்களையும் இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள்.
- பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு உயர் பதவிகளைப் பெறுவீர்கள்.
- ஊதியம் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். பணத்தை சேமிப்பீர்கள்.
- தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம்
- சுக்ராதித்ய ராஜயோகம் துலாம் ராசியின் முதல் வீடான லக்னத்தில் நடக்க இருப்பதால், இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும்.
- உங்களின் ஆளுமை பிரகாசிக்கும். மற்றவர்களை கவரும் திறன் அதிகரிக்கும்.
- புதிய உறவுகள் மலரவும், இருக்கும் உறவுகள் பலப்படவும் வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
- நிதி நிலைமை மேம்படலாம். குறிப்பாக கலை, அழகு சாதனப் பொருட்கள், பேஷன் துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான காலம் ஏற்படும்.
- சூரியன் துலாம் ராசியில் பலவீனமாக இருப்பதால் சில பின்னடைவுகளையும் சந்திக்கலாம். மன அழுத்தம் நிறைந்து காணப்படலாம்.
- நவம்பர் 16 சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறும் வரை நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)