- Home
- Astrology
- சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் அடிமேல் அடி வாங்கப் போகும் 3 ராசிகள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Sun Transit: அக்டோபர் 24 அன்று சூரியன் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் 3 ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்பத்தில் சவால்கள் அதிகரிக்கலாம். அவர்கள் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து பார்ப்போம்.

சூரியனின் நட்சத்திர மாற்றம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் தனது நட்சத்திரத்தையும் ராசியையும் மாற்றுகிறார். இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சூரிய பகவான் ராகுவின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரத்திற்குள் நுழையும் போது, அது சில ராசிக்காரர்களுக்கு சோதனைக் காலமாக மாறுவது வழக்கம்.
அக்டோபர் 24 அன்று ராகு பகவானால் ஆளப்படும் சுவாதி நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழையவுள்ளார். நவம்பர் 6-ஆம் தேதி மாலை 4 மணி வரை சூரியன் இதே நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்தக் காலக்கட்டத்தில், ஜோதிடக் கணக்கீடுகளின்படி சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் தங்கள் தொழில், நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிடும். அந்த அதிர்ஷ்டமற்ற ராசிகள் எவை மற்றும் அவற்றுக்கான எளிய பரிகாரங்கள் என்ன என்பதை பற்றிப் பார்ப்போம்.
1. மேஷம் (Aries)
மேஷ ராசிக்காரர்களுக்கு சுவாதி நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம் பணியிடத்தில் பல்வேறு சவால்களை உருவாக்கக்கூடும். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் எதிர்பாராத தடைகளையும், கடுமையான வேலை அழுத்தத்தையும் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க முடியாமல் திணறும் சூழல் ஏற்படும்.
வியாபாரத்தில் லாபத்தை விட இழப்புகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பண நெருக்கடி அல்லது நிதி இழப்புகள் உங்களை மனச்சோர்வடையச் செய்யலாம். எனவே, ஒவ்வொரு நிதி சார்ந்த முடிவையும் மிகக் கவனமாக எடுங்கள். அலுவலகத்தில் செய்யும் சின்ன தவறு கூட பெரிய சிக்கலில் கொண்டு போய் விடலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை அல்லது வெல்லம் தானமாக வழங்குவது தோஷங்களைக் குறைக்கும்.
2. கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிகவும் சோதனையான காலமாக இருக்கப் போகிறது. வேலையில் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக கடுமையான மன அழுத்தம் உண்டாகலாம். இந்த மாற்றத்தின் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக அமையாது என்பதால், உங்கள் தன்னம்பிக்கை சற்று குறைய வாய்ப்புள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என இரு முனைகளிலிருந்தும் வரும் அடுத்தடுத்த பிரச்சினைகள் உங்களை மனதளவில் சோர்வடையச் செய்யும். மேலும், உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இந்த காலகட்டத்தில் யாரிடமிருந்தும் உடனடி உதவிகள் கிடைப்பது கடினம் என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி தைரியத்துடன் எதிர்கொள்ளுங்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு, சிவலிங்கத்திற்கு நீரூற்றுவது மன அழுத்தத்தை குறைக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது அரிசி தானமாக வழங்குவது நல்லது.
3. தனுசு (Sagittarius)
தனுசு ராசிக்காரர்களுக்கு சுவாதி நட்சத்திரத்தில் சூரியன் பயணிக்கும் இந்த நாள்களில், நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் முடிவடைவதில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தலைதூக்கலாம்.
வெளிநாடு தொடர்பான வேலைகள் அல்லது வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்குப் படிப்பில் கவனம் சிதறல் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் அனுசரித்து செல்வது நல்லது. எங்கு பயணம் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். உடல்நலனில் அதிக கவனம் தேவை, வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களை சாற்றி வழிபடவும். ஏழை மாணவர்களின் கல்விச் செலவிற்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது சூரியனின் தீய தாக்கத்தை குறைக்கும்.

