MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. வாழ்க்கையே மாறப்போகுது!

சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு பொற்காலம்.. வாழ்க்கையே மாறப்போகுது!

Shani Nakshatra Transit: சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர வக்ர பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு பொற்காலம் பிறந்துள்ளது. தொழில், நிதி நிலை மற்றும் குடும்ப வாழ்வில் மகத்தான முன்னேற்றமும், எதிர்பாராத அதிர்ஷ்டமும் கைகூடும்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 15 2026, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி
Image Credit : AI

சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி

நீதி மற்றும் நேர்மையின் அடையாளமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவது வழக்கம். அதோடு அவ்வப்போது நட்சத்திர இடப்பெயர்ச்சியையும் மேற்கொள்வார். தற்போது மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர நிலையில் சஞ்சரித்து வரும் சனி பகவான், சுமார் 118 நாட்கள் அதாவது 2027 பிப்ரவரி வரை இதே நிலையில் தொடர உள்ளார்.

சனி பகவானின் இந்த சிறப்பு வாய்ந்த நட்சத்திர சஞ்சாரமானது அனைத்து ராசிகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக அமைய உள்ளது. இக்காலத்தில் இவர்களின் தொழில், நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் அற்புதமான முன்னேற்றங்கள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை? என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம்
Image Credit : ChatGPT

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி புதிய வருமான வழிகளை திறந்துவிடும். நீண்ட நாட்களாக உங்களது பொருளாதார நிலை மந்தமாக இருந்திருந்தால், இக்காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்த நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்புகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கான முழுமையான பலன்களை இப்போது அனுபவிக்க தொடங்குவீர்கள்.

36
மிதுனம்
Image Credit : ChatGPT

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் ஒரு பொற்காலமாக மாறக்கூடும். இதுவரை நிலுவையில் இருந்த அல்லது பாதியில் நின்ற முக்கியமான வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். எனினும், எத்தகைய முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், சற்று யோசித்து நிதானமாக செயல்படுவது நல்லது. அவசரப்படுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

46
துலாம்
Image Credit : ChatGPT

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் வழங்கப்படலாம். தொழில் வாழ்க்கையில் அசுர வளர்ச்சியை உங்களால் காண முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகி மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடைவதுடன், நீங்கள் செய்யும் அர்ப்பணிப்பான உத்தியோகம் உங்களுக்கு நல்ல நற்பெயரையும் பெற்றுத் தரும்.

56
மகரம்
Image Credit : ChatGPT

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த நிலை வாழ்வில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களை வழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய மற்றும் சிறந்த வேலைவாய்ப்புகளை பெறுவர். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் ஈட்டும் வாய்ப்புகள் அமையும். கடந்த காலத்தில் உங்களை வாட்டி வதைத்த மன அழுத்தம் மற்றும் கவலைகள் நீங்கி, வாழ்வில் நிம்மதியும் அமைதியும் நிலவும். பொருளாதார ரீதியாக உங்களது நிலை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெறும்.

66
கும்பம்
Image Credit : ChatGPT

கும்பம்

கும்ப ராசியினருக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் சனி பகவான் தகுந்த நல்ல பலன்களைத் தருவார். உத்தியோகத்தில் இதற்கு முன் சந்தித்து வந்த முட்டுக்கட்டைகள் மற்றும் தடைகள் விலகி, முன்னேற்றத்திற்கான புதிய வாசல்கள் திறக்கப்படும். தொடர் முயற்சிகளால் கஷ்டங்கள் குறைந்து வெற்றி உங்களை தேடி வரும். தற்போது ஏழரை சனி காலம் நடந்துகொண்டிருந்தாலும், சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதியில் சஞ்சரிப்பதால் நற்பலன்களில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், நிச்சயம் உறுதியான நல்ல பலன்களை பெறுவீர்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Budhan Nakshatra Transit: போட்டித் தேர்வில் வெற்றி, புதிய வேலை வாய்ப்பு.. புதன் நட்சத்திர மாற்றம்.. 3 ராசிகள் இருக்கு
Recommended image2
Astrology: இனி கடனே இருக்காது.! தனாகாரகன் சஞ்சாரத்தால் 6 நட்சத்திரக்காரர்களுக்கு கோடிகள் குவியப்போகுது.! நிலையான வருமானம் தரும் சங்க நிதி யோகம்.!
Recommended image3
Numerology : இந்த தேதில பிறந்தவங்களா நீங்க? ஒன்னுக்கு ரெண்டு மூணு கல்யாணம் பண்ற யோகம் இருக்கு!
Related Stories
Recommended image1
Astrology: புதனின் நட்சத்திர மாற்றம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும்.. பணமழை!
Recommended image2
சுக்கிரன் அஸ்தமனத்தால் 'இந்த' 4 ராசிகளுக்கு பணமழை.. கோடீஸ்வர யோகம் ஸ்டார்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved