- Home
- Astrology
- Sun Transit 2026: ரோகிணி நட்சத்திரத்திற்கு மாறும் சூரிய பகவான்.! அடுத்த 30 நாட்கள் ராஜயோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Sun Transit 2026: ரோகிணி நட்சத்திரத்திற்கு மாறும் சூரிய பகவான்.! அடுத்த 30 நாட்கள் ராஜயோகம் பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Sun Transit In Rohini Nakshatra: சூரிய பகவான் ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். சந்திரனை அதிபதியாகக் கொண்ட இந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கவிருக்கிறது. அது குறித்து இங்கு காணலாம்.

Sun Transit 2026
வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜாவாக அழைக்கப்படுகிறார். இவர் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அதேபோல் அவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். தற்போது கிருத்திகை நட்சத்திரத்தில் பயணித்து வரும் அவர், அதிலிருந்து வெளியேறி மே 25ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். ரோகிணி நட்சத்திரம் சந்திர பகவானின் நட்சத்திரமாகும். சூரியனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகள் கிடைக்கவுள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.
Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!

மேஷம்
சூரியனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் மிகுந்த நன்மைகளை கொண்டு வரும். மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய பகவான் நிதி ரீதியாக நன்மைகளை வழங்குவார். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல சூழல் உருவாகும். பரம்பரை சொத்துக்களில் இருந்து பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. நீண்ட காலமாக முடங்கி கிடந்த பணம் திரும்ப கைக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்.
ரிஷபம்
சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்களையும், வருமானம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்புகளையும் கொண்டுவரும். மே 25 முதல் ஜூன் 8 வரை நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். லட்சுமி கடாட்சம் பெருகும். புதிய கார் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். உங்கள் பதவியும், கவுரவமும் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்காலத்தில் லாபத்தை ஈட்டி தரும் புதிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் ஆகியவை சேரும். புதிய உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். எனவே சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை கொண்டு வரும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தத்திற்காக காத்திருந்தாலோ இந்த காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை அடையலாம். அரசியல் மற்றும் அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை முன்பை விட வலுவாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் செய்யும் முதலீடுகள் நிதி ஆதாயங்களை தரும். குடும்பத்தில் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி நல்ல பலன்களை கொண்டு வரும். நிலம், வீடு, மனை, கடை, கார் வாங்கும் யோகம் உண்டு. நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள நேரலாம். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். நீங்கள் சட்ட விவகாரம் அல்லது நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டிருந்தால் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும்.
தனுசு
ரோகிணி நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம் என்பது தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கக்கூடும் இந்த காலகட்டத்தில் கணிசமான நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். தொழிலில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். உங்களை வாட்டி வதைத்து வந்த போட்டியாளர்கள் விலகுவார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமண வரன் கைகூடும். தள்ளிப்போன காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். நிதி நிலைமையில் திடீர் ஆதாயங்கள் ஏற்படலாம். பல வழிகளில் இருந்து பணம் வரும். வங்கி இருப்பு கணிசமாக உயரும். புதிய உற்சாகத்துடனும், ஆற்றலுடனும் செயல்படுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

