MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rahu Ketu 2026: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கேது பகவான்.! 4 ராசிகளுக்கு பலத்த அடி விழப்போகுது.! சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!

Rahu Ketu 2026: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் கேது பகவான்.! 4 ராசிகளுக்கு பலத்த அடி விழப்போகுது.! சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!

Ketu Chandra Conjunction : சிம்ம ராசியில் கேது சந்திரன் இணைவதை அடுத்து ‘கிரகண யோகம்’ உருவாகிறது. இதன் காரணமாக நான்கு ராசிகளுக்கு வேலை இழப்பு, நிதியிழப்பு ஏற்படலாம். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 21 2026, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rahu Ketu 2026
Image Credit : ChatGpt

Rahu Ketu 2026

ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் இணையும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உண்டாகும். அந்த வகையில் கேது மற்றும் சந்திரன் இணைவதால் ‘கிரகண யோகம்’ உருவாகிறது. ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது இருவரும் அசுப கிரகமாக அறியப்படுகின்றனர். மே 22 ஆம் தேதி சந்திர பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பகவான் இருப்பதால் ‘கிரகண யோகம்’ உருவாகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

கேது மற்றும் சந்திரன் சேர்க்கை சிம்ம ராசியில் நிகழ்வதால் சிம்ம ராசிக்காரர்கள் மே 22 முதல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. உங்கள் தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாக இருந்தாலும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். பயணங்களின் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டும். தம்பதிகள் வார்த்தைகளை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நஷ்டத்தை உண்டாக்கும். சேமிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!

Related Articles

Related image1
Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Related image2
Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!
35
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

கேது மற்றும் சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல்களைக் கொண்டு வரும். பழைய உடல்நலப் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும். ஆன்லைன் பரிவர்த்தனைகள் அல்லது பண பரிவர்த்தனைகளின் போது கவனத்துடன் இருக்க வேண்டும். உங்களின் ஆடம்பரப் பொருள் ஒன்று களவு போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. பணியிடத்தில் சக ஊழியர்களுடன் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்த பயன்படுத்த வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக இந்த காலத்தில் சதி செய்யக்கூடும். கடன் கொடுக்கல், வாங்கலை தவிர்ப்பது நல்லது.

45
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்கள் கேது சந்திரன் சேர்க்கையால் சவால்களை சந்திக்கக் கூடும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்காமல் போகலாம். தொழிலில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் உங்களை சோர்வடையச் செய்வார்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் தொல்லை அதிகரிக்கும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்கக்கூடாது. பங்குச்சந்தையில் இழப்பீடுகளை சந்திப்பீர்கள். திடீர் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. சிறு, சிறு பிரச்சனைகள் உங்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறும்.

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு கேதுவின் பார்வை அசுப பலன்களைத் தரும். மே 22 முதல் இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, நிதி சார்ந்த விஷயங்கள், வேலையில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களிடையே பிரிவு உண்டாகக்கூடும். தொழில் செய்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பங்குச்சந்தை போன்றவற்றில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஆலோசனைப் பெறுவது நல்லது. மன அழுத்தம், உடல் சோர்வு ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக குழந்தைகளின் உடல் நலனில் ஏற்படும் பிரச்சனைகள் உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: லட்சுமி நாராயண ராஜயோகம்! கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்! பணமழை பொழியப் போகுது!
Recommended image2
Astrology: திருமணத்திற்கு பிறகு ராஜவாழ்க்கை வாழும் 4 ராசிகள்.! இவர்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்குமாம்.!
Recommended image3
Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!
Related Stories
Recommended image1
Mars Transit in Aries: மேஷ ராசியில் ருச்சக ராஜயோகம்.! மகா பாக்கியமும், பெரும் அதிர்ஷ்டமும் பெறப்போகும் ராசிகள்.!
Recommended image2
Rahu Transit 2026: ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.! 3 ராசிகளுக்கு கஷ்டங்கள் எல்லாம் தீரப்போகுது.! ராஜவாழ்க்கை வாழப் போறீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved