- Home
- Astrology
- சூரியன் சனி சேர்க்கையால் உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது.!
சூரியன் சனி சேர்க்கையால் உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகுது.!
Dwidwadash Yog 2026: பிப்ரவரியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் உருவாகும் சக்திவாய்ந்த யோகம் நான்கு ராசிகளுக்கு நன்மைகளைத் தரும். அந்த யோகம் குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் பார்க்கலாம்.

த்வித்வாதச யோகம் 2026
பிப்ரவரி 19, 2026 வியாழன் காலை 11:15 மணிக்கு, சூரியனும் சனியும் 30 டிகிரி இடைவெளியில் த்வித்வாதச யோகத்தை உருவாக்குகின்றனர். ஆன்மா, அதிகாரம், தலைமைப் பண்பு ஆகியவற்றின் காரகரான சூரியனும், நீதி, ஒழுக்கம், கர்மா ஆகியவற்றின் காரகரான சனி பகவானின் ஆகிய இருவரின் சக்திகள் தொடர்பில் வரும்பொழுது அது ஆளுமைப் பண்புகளையும், தொழில் ரீதியான மாற்றங்களையும் தரும். சூரியன் சனி சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் குறித்து கீழே காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன்-சனி உருவாக்கும் த்வித்வாதச யோகம் மிகவுப் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சுபமாக அமையும். எல்லா இடங்களிலும் வெற்றியும் மரியாதையும் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். வேலையில் புதிய பொறுப்புகள் தேடி வரும். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் லாபம் உண்டாகும். பணத்தை சேமிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நன்மை தரும். எல்லா துறைகளில் வெற்றி காண்பீர்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வரும். அரசு தொடர்பான ஒப்பந்தங்கள் கைக்கு கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். வணிக முடிவுகள் லாபத்தைத் தரும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் சாதகமாக இருக்கும். இந்த காலக்கட்டத்தில் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிதி நிலைமை மேம்படும். பணியிடத்தில் முன்னேற்றம், ஆரோக்கியம் சீராகும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தாயார் வழியில் இருந்து சொத்துக்கள் கிடைக்கும். குடும்ப தகராறுகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

