- Home
- Astrology
- Astrology : சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.! 4 ராசிகளின் வாழ்க்கையை அடியோடு மாறப் போகுது.!
Astrology : சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சூரியன்.! 4 ராசிகளின் வாழ்க்கையை அடியோடு மாறப் போகுது.!
Sun Transit in Astrology: சூரிய பகவான் தனது சொந்த நட்சத்திரத்திற்கு திரும்ப இருப்பதால் சில ராசிக்காரர்கள் அடுத்த சில தினங்களுக்கு நல்ல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்
வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராஜாவாக சூரிய பகவான் அறியப்படுகிறார். இவர் செப்டம்பர் 13-ஆம் தேதி அன்று பூரம் நட்சத்திரத்திலிருந்து தனது சொந்த நட்சத்திரமான உத்திர நட்சத்திரத்திற்கு மாறுகிறார். சூரியன் தனது சொந்த நட்சத்திரத்திற்கு நுழைவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியனின் உத்திர நட்சத்திர பெயர்ச்சியால் பலன் பெறும் நான்கு ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
சூரிய பகவானின் உத்தர நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தொழில் வாழ்க்கையைப் பொறுத்தவரை மேஷ ராசிக்காரர்கள் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். அலுவலகத்தில் வேலை செய்து வருபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம். சூரியனின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். உடல் நலம் சீராக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில், நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.
கடகம்
சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி கடக ராசி காரர்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தைரியத்தால், துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். திருமண உறவுகள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வணிகர்கள் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். நீங்கள் செய்திருக்கும் முதலீடுகளில் இருந்து பணவரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் வழங்கப்படலாம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்திலும் சீரான முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி அற்புதமான பலன்களை வழங்கும். நீங்கள் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களின் உழைப்புக்கான வெற்றி கிடைக்கும். பல்வேறு துறைகளில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உள்ளன. சமூகத்தில் மரியாதை மேம்படும். நட்பு வட்டம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி வரும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நிலம், மனை, கட்டிடம், வாகனம் ஆகியவை வாங்கும் யோகம் உண்டு. குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி நல்ல பலன்களை உறுதி செய்யும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் செய்துவரும் வேலையில் வெற்றியை எதிர்பார்க்கலாம். புதிய டெண்டர்கள், ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. வருமானம் அதிகரிப்பதால் நிதிநிலைமை மேம்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களுடனான சண்டைகள் தீர்ந்து மனமகிழ்ச்சி ஏற்படும். மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)