- Home
- Astrology
- Astrology: வக்ர நிலையை அடையும் குரு பகவான்.. சில மாதங்களில் 3 ராசிகள் கோடீஸ்வரராகப் போறீங்க.!
Astrology: வக்ர நிலையை அடையும் குரு பகவான்.. சில மாதங்களில் 3 ராசிகள் கோடீஸ்வரராகப் போறீங்க.!
ஜோதிடத்தின்படி குரு பகவான் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்க இருப்பதால் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், செல்வத்தையும் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

குரு வக்ர பெயர்ச்சி 2025
நவகிரகங்களில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவரின் ராசி மாற்றம் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 9 கிரகங்களும் அவ்வப்போது ராசியை மாற்றுவதுடன், வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு நகர்வது போன்ற நிலையிலும் காணப்படுகின்றன. அந்த வகையில் தற்போது குருபகவான் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடகத்தில் வக்ர நிலையில் பயணிக்க இருக்கிறார்.
நவம்பர் 11, 2025 செவ்வாய் கிழமை இரவு 10.11 மணிக்கு குரு வக்ர நிலையில் பெயர்ச்சி அடைகிறார். மார்ச் 11, 2026 புதன்கிழமை இரவு 08:58 முதல் அவர் நேரடியாக பயணிப்பார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
குரு பகவானின் வக்ர நிலை மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயப்பதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். உங்கள் ராசியில் இருந்து செல்வம் மற்றும் பேச்சின் இடத்தில் குரு வக்ரமாக இருப்பார். இதன் காரணமாக உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். உங்கள் பேச்சாற்றல் அதிகரிப்பதால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். இது உங்கள் அந்தஸ்தை அதிகரிக்கும். வணிகம் செய்து வருபவர்கள் உங்கள் பேச்சின் மூலமாகவே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
கன்னி
குருவின் வக்ர நிலை கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். ஜோதிடங்களின்படி குரு உங்கள் ராசியில் இருந்து 11-வது வீட்டில் வக்ர நிலையில் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பை காண முடியும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் புதிய பாதைகள் திறக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். நீங்கள் வகுக்கும் திட்டங்கள் ஒன்றொன்றாக நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். குரு உங்கள் ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உங்களின் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கும். உங்கள் துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நல்ல லாபத்தைத் தருவீர்கள். குடும்ப வாழ்க்கையில் இனிமை இருக்கும். பெற்றோர்கள், குழந்தைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு திருமண வரம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)