- Home
- Astrology
- Astrology : 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் செவ்வாய்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது.!
Astrology : 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவானை நேருக்கு நேர் சந்திக்கும் செவ்வாய்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்கப்போகுது.!
Shadashtak Yoga : செப்டம்பர் 20 ஆம் தேதி சனி மற்றும் செவ்வாய் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகம் பொதுவாக அசுபமாக கருதப்பட்டாலும், இந்த முறை உருவாகும் ஷடாஷ்டக யோகம் 3 ராசிக்காரர்களுக்கு பலன்களை வாரி வழங்குகிறது.

சனி-செவ்வாய் நகர்வு
ஜோதிட சாஸ்திரங்களின்படி சனி மற்றும் செவ்வாய் இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒழுக்கம், கர்மா மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களுக்கு பொறுப்பாவார். அதே சமயம் செவ்வாய் ஆற்றல், தைரியம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் ஒரு கிரகமாகும். தற்போது சனி பகவான் மீனத்தில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். நவம்பர் வரை இந்த நிலையில் அவர் பயணிப்பார். சனி பகவான் மெதுவாக நகரக்கூடிய கிரகமாவார். இவர் இரண்டரை ஆண்டுகள் வரை ஒரு ராசியில் இருப்பார். மீண்டும் அதே ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அவர் நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குவார்.
ஷடாஷ்டக யோகம்
அந்த வகையில் வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி செவ்வாய் பகவானுடன் இணைந்து ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறார். சனி மற்றும் செவ்வாய் இருவரும் 150 டிகிரி கோணத்தில் சந்திப்பதால் இந்த யோகம் உருவாகிறது. இந்த யோகம் பொதுவாக அசுபமாக கருதப்பட்டாலும், இந்த முறை உருவாகும் யோகமானது மூன்று ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக அமைய உள்ளது. இந்த யோகத்தின் விளைவு அனைத்து ராசிக்காரர்களிடமும் காணப்படும். இது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும் புதிய சவால்களையும் கொண்டு வரும். இந்த யோகத்தால் பலன் பெறும் மூன்று ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் உருவாக்கும் ஷடாஷ்டக யோகம் பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும். இந்த யோகத்தின் காரணமாக உங்கள் நிதிநிலை வலுவாக இருக்கும். செவ்வாய் கிரகத்தின் பார்வை செல்வ வீட்டில் விழுவதால், செல்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் காணப்படும். கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஏற்படும். குடும்ப உறவுகள் பலப்படும். புதிய வெற்றிகள் மற்றும் மகிழ்ச்சிகள் தேடி வரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் இணைந்து உருவாக்கும் ஷடாஷ்டக யோகம் மிகவும் நன்மை பயக்கும். இந்த யோகத்தின் பலனால் வியாபாரம் மற்றும் வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். உங்களின் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது உங்கள் வருமானத்தை மேம்படுத்தும். நிதி ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு நன்மை பயக்கும். வீண் செலவுகள் குறைந்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல திட்டங்கள், நிலம் அல்லது தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக அமையும். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகம் தொழில் ரீதியாக நன்மைகளை பயக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தொழில் வாழ்க்கைக்கு புதிய திசை உருவாகும். உங்கள் வணிகம் வேகமெடுக்கும். முன்பு உங்களை தொந்தரவு செய்த பிரச்சினைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். தொழிலில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகள் விலகி விடுவார்கள். பரம்பரை சொத்துக்களில் இருந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பம் மற்றும் தனிப்பட்ட உறவுகள் மேம்படும். உங்கள் மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து மன அமைதி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)